ரிலீசுக்கு சில நாளே உள்ள நிலையில் பி.வாசு தலையில் குண்டை தூக்கிப்போட்ட சந்திரமுகி 2 படக்குழு..!

post-img

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகை ஜெகநாதன் இயக்குனர் பி வாசு கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே வெளியாகி இருக்க வேண்டியது.


ஆனால் திடீரென இந்த திரைப்படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதிற்கான காரணம் கிராபிக்ஸ் பணிகளில் சிறு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது அதனை சரி செய்த பிறகு படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கூறினார்கள்.


ஆனால் இதற்கு உண்டான உண்மையான காரணத்தை இயக்குனர் பி வாசு தற்போது போட்டு உடைத்து இருக்கிறார்.


அவர் கூறியதாவது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது படமாக்கப்பட்ட 480 ஷாட்டுகளை காணவில்லை என படக்குழு தெரிவித்தது.


ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் ஒட்டுமொத்த பட குழுவும் அதிர்ந்து போனது.
அதன் பிறகு பல நாட்களை போராடி அந்த காட்சிகளை திரும்ப பெற்றோம். அதன் பிறகு முறையாக எடிட் செய்து படத்தை தயார் செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் பி வாசு.


வரும் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக கூடிய இந்த திரைப்படம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து வந்து பார்க்கலாம்.

 

 

Related Post