நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் 21 மாதங்கள் கழித்து ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.
பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் 21 மாதங்கள் கழித்து ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் தனக்கே உரிய பார்முலாவில் இந்தப் படத்தை எடுக்க முயன்றுள்ளார். அதிலும் முதல் பாதியில் அவருடைய ப்ளாக் காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் அதிரடி காட்சிகள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளன.
மேலும் ஆறாவது நாளும் பெரும் வசூலை ஈட்டிய நிலையில், தற்போது ஏழாவது நாளில் உலகம் முழுவதும் சுமார்400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.