56 வயசுலயும் இப்படியா..? – நடிகை அமலா-வை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

post-img


கடந்த 1967 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர் நடிகை அமலா இவருடைய உண்மையான பெயர் அமலா முகர்ஜி ஆகும்.
கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கி நடித்த மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அமலா.

அதனை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, ஒரு இனிய உதயம், வேலைக்காரன் என சினிமாவில் அறிமுகமான முதல் நான்கு வருடங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தினார் நடிகை அமலா.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. பல முன்னணி நடிகர்கள் நடிகை அமலாவுடன் ஜோடி சேர ஆவலாய் இருந்தனர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு கற்பூர முல்லை என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். அதனை தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட இவர் 1994 ஆம் ஆண்டு அகில் அக்கினி என்பவரை குழந்தையாக பெற்றார்.


திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார் நடிகை அமலா.திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான கணம் என்ற திரைப்படத்தில் அம்மா வேடமிட்டு நடித்திருந்தார். தற்போது 56 வயதாகும் நடிகை அமலா உடற்பயிற்சி கூடத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

 

 

Related Post