சினிமா நடிகைகளை அழகாக முகத்தில் மேக்கப்புடன் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால், சில நேரங்களில் நடிகைகளின் கவனமில்லாமல் அவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகாது வாடிக்கையாக நடந்து வருகிறது.
அந்த வகையில் மலையாள நடிகை மகிமா நம்பியார் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழில் சாட்டை படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதன்பிறகு அசுரகுரு, மகாமுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்பொழுது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரத்தம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மஹிமா நம்பியார்.
படப்பிடிப்பு முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது வாகனத்தில் அசதியில் வாயை பிளந்த படி தூங்கி இருக்கிறார் நடிகை மகிமா நம்பியார். எப்பேர்ப்பட்ட அழகியாக இருந்தாலும் தூக்கத்தின்போது வாயை திறந்து கொண்டது விகாரமான முகத்தை வைத்துக் கொண்டு தூங்குவது ஒன்றும் அதிசயமல்ல.
அதுபோல வாயை பிளந்து கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் மகிமா நம்பியார் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்தது வேறு யாரும் கிடையாது தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தான்.
புலம்பும் ரசிகர்கள்..!
இந்த புகைப்படங்களை கிளிக் செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடினமாக உழைக்கும் படக்குழுவை பாருங்கள் என்று கூறி வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் அமுதன்.
இதனை பார்த்த நடிகை மகிமா நம்பியார் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அசிங்கம் இது.. நான் இந்தியாவுக்கு இனிமேல் வரமாட்டேன்.. இது ஒரு மோசடி… கடினமாக உடைக்கும் அந்த தயாரிப்பாளரின் புகைப்படம் எங்கே..? என்று கேள்வி எழுப்பி புலம்பி இருக்கிறார் நடிகை மகிமா நம்பியார்.
மேலும் மகிமா நம்பியார் புலம்புவதை பார்த்த நடிகர் விஜய் ஆண்டனி உங்களுடைய இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அப்படியே என்னை பார்ப்பது போலவே இருக்கிறது… நானும் இப்படித்தான் தூங்குவே..ன் என்று சொல்வது போல மகிமா நம்பியாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.