What The Fish.. சிவகார்த்திகேயன் துரோகம்..! – இமான் குறித்து முதல் மனைவி மோனிகா..! – விளாசும் ரசிகர்கள்…!

post-img


இசையமைப்பாளர் டி. இமான் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.
ஆனால் அது என்ன துரோகம்.? எதனால் அந்த துரோகத்தை நான் வெளியில் சொல்லவில்லை குறிப்பிட்ட விஷயங்களை டி இமான் பதிவு செய்திருந்தார்.
மறுப்பக்கம், சிவகார்த்திகேயனுக்கும் , இமானுக்கு என்ன பிரச்சனை என்று கண், காது, மூக்கு வைத்து உயிர் கொடுத்து உலவ விட்டுள்ளது பெற்று இருக்கிறது இணைய சமூகம்.


நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமானின் முதல் மனைவிக்கும் என்ன தொடர்பு..? இதனால் தான் டி இமான் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து இந்த விவகாரத்திற்கு எந்த ஒரு விளக்கமும் வந்தபாடில்லை. சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்ற பக்கங்கள் மட்டும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இப்படி இருக்க தேவையான நேரத்தில்.. தேவையில்லாத ஒரு விஷயத்தை பேசி தற்போது சிக்கலில் சிக்கி இருக்கிறார் டி இமானின் முன்னாள் மற்றும் முதல் மனைவியான மோனிகா.
மோனிகா கூறியுள்ளதாவது, சிவகார்த்திகேயன் என்னுடைய குடும்ப நண்பர். தங்கமான மனிதர். மிகவும் டீசன்டான மனிதர். அவர் எங்களுடைய குடும்ப நண்பராக இருந்தார்.
இமானம் நானும் பிரிந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஒரு குடும்ப நண்பராக யாராக இருந்தாலும் இதனை செய்வார்கள்.
என்னுடைய பக்கம்.. நியாயத்தின் பக்கம் சிவகார்த்திகேயன் நின்றார். இதைத்தான் இமான் துரோகம் என்று குறிப்பிடுகிறார் போல தெரிகிறது. ஒரு குடும்ப நண்பராக இருப்பவர் அந்த குடும்பம் பிரிந்து கூடாத கூடாது என்று தான் நினைப்பார்.
அதைத்தான் சிவகார்த்திகேயனும் நினைத்தார். இதில் சிவகார்த்திகேயன் மீது என்ன தவறு இருக்கிறது..? சிவகார்த்திகேயனும் நானும் நல நண்பர்கள் மட்டும்தான்.
ஆனால் இவர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று கூறியதும் வெளியில் வேறு விதமாக அதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
உற்று நோக்கி பார்த்தால் இந்த விவகாரம் எவ்வளவு சென்சிட்டிவான.. எவ்வளவு உணர்வுபூர்வமான விவகாரம்.. இதனை எப்படி கையாள வேண்டும்.. என்பதில் ஒரு தெளிவு வேண்டும்.. ஒரு புரிதல் வேண்டும்.. ஆனால் அவசர கதியில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று ஏற்கனவே எரியக்கூடிய விவகாரத்தில் மேலும் எண்ணெய்யை ஊற்றுவது போல செய்து இருக்கிறார் இமானின் முதல் மனைவி மோனிகா.


இவருடைய விளக்கம் இந்த விவகாரத்தை நீர்த்து போக செய்து விடும் என்று நினைத்தாரோ என்னவோ.. தெரியவில்லை. ஆனால், இவர் பேசியது இந்த பேச்சு ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் விவகாரத்தை தீப்பிடிக்க வைத்திருக்கிறது.


இது குறித்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முதலில் மோனிகா 12 ஆண்டு காலம் இமானுடன் வாழ்ந்தீர்கள். ஆனால் அவர் விவாகரத்துக்கு பிறகு ஒரே வருடத்தில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று அவரை கடுமையாக விமர்சனம் செய்தீர்கள்.
ஆனால் அதே 12 ஆண்டு இமானுடன் வாழ்ந்து விட்டு தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறீர்களே..? இது என்ன நியாயம்..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இமான் சொல்லும்பொழுது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை சமாளிக்கிறேன் என்ற பெயரில் தற்போது கேவலமான விளக்கம் ஒன்றை கொடுத்து இருக்கிறீர்கள் அல்லவா..? இப்போது இந்த சந்தேகம் இன்னும் வலுவடைந்து இருக்கிறது.
தேவையான நேரத்தில் தேவையில்லாத பதிவு என்றும் முன்னாள் மனைவி மோனிகா குறித்து ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பதில் என்னவாக இருக்கப்போகிறது..? அல்லது எதுவும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்று விடுவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் இணைய வட்டாரத்தில் இந்த தகவல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. லியோ படத்தின் ரிலீஸ் ஃபீவரை கடந்தும் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் இமான் குறித்த இந்த சர்ச்சைக்கு கண்டிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் வாய் திறந்து பதில் கொடுத்தால் தான் இந்த பிரச்சனை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Related Post