நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.
இவருடைய திரை பங்களிப்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்தவர்.
ஆனால் இவருடன் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கக்கூடிய ஒரு நடிகர். ஆனால் இவர் உடன் அடித்தவர்கள் நடிகர் வடிவேலுவை பற்றி கூறுங்கள் என்று கேட்டால் கழுவி கழுவி ஊற்றுவார்கள்.
அப்படியான ஒரு ஆள்தான் நடிகர் வடிவேலு. இந்நிலையில், 52 வயதான தன்னுடைய உடன் பிறந்த தம்பி மரணத்திற்கு மருத்துவச் செலவுக்கு உதவாத இவரை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த இவர் பிரபல அரசியல் கட்சி ஒன்றுக்கு பேச்சாளராக பணியாற்றி தன்னுடைய வாழ்க்கையை நாசம் செய்து கொண்டார்.
இதனால் நடிகர் வடிவேலு மீது அறிவிக்கப்படாத தடை ஒன்று இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடிப்பதும் திரையில் தோன்றுவதுமாக இருந்த நடிகர் வடிவேலுவின் சினிமா வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்து விட்டது என கூறலாம்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி 52 வயதான நிலையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இது குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மட்டுமில்லாமல் நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் பார்ப்பதற்கு அச்சு அசல் வடிவேலு போலவே இருப்பார்.
இவர் இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
ஆனால் அதற்கு பிறகு போதிய சினிமா வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஜவுளிக்கடை நடத்தி வந்திருக்கிறார். அன்றாட பிழைப்புக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் கல்லீரல் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.
அலறும் இளசுகள்..!கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் வடிவேலு தன்னுடைய படங்களில் தனக்கு அருகில் இருக்கும் கதாபாத்திரமாகவோ அல்லது படத்தில் ஏதோ ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகளையும் வாங்கி கொடுத்திருந்தால் கூட அவருடைய தம்பி நல்ல வசதியாக இருந்திருப்பார். அவருடைய சிகிச்சையை மருத்துவ செலவை அவரே பார்த்துக் கொண்டிருப்பார்.
அதையும் செய்யாமல். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தன்னுடைய தம்பியின் மருத்துவ செலவுக்கு உதவாமல் இருந்து விட்டார். வடிவேலுவின் தம்பிக்கு இருந்தது பெரிய வியாதி ஏதும் கிடையாது. கல்லீரல் பாதிப்பு தான்.
கல்லீரல் பாதிப்புக்கு இன்று எத்தனையோ நவீன மருத்துவங்கள் வந்துவிட்டது. அதையும் கூட செய்ய தேவையில்லை. சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஒரு போன் செய்து இப்படி விஷயத்தைக் குறித்தது போதும் அவருடைய சிகிச்சை சிறப்பாக நடைபெற்று இருக்கும்.
அதேசமயம், வடிவேலுவின் தம்பி எந்த மாதிரியான குணாதிசயம் கொண்டவர். அவருடைய போக்கு எப்படி என்று எதுவும் நமக்கு தெரியாது. ஆனாலும் கூட தன்னுடைய தம்பியின் சிகிச்சைக்கு ஒரு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால் தன்னுடைய தம்பியை காப்பாற்றி விட முடியும் என்ற நிலையில் நடிகர் வடிவேலு உதவாமல் அவருடைய உடலின் முன்பு நின்று கொண்டு கண்ணீர் சிந்துவதை பார்க்கும் பொழுது.. அதனை நாம் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை என்று பிரபல பத்திரிகையாளரும் சர்ச்சைக்குரிய நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்.