கதாநாயகியை தேடும் கே.எஸ் ரவிக்குமார்.. கூடவே நடிகை ராதிகாவும்..

post-img

விஜய் டிவியில் புதியதாக யார் அடுத்த கதாநாயகி என்ற நிகழ்ச்சி துவங்க உள்ளது. அதில் நடுவர்களாக கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் யார் அடுத்த பாக்யாவாகவும், காவியாகவும், கண்ணமாகவும் கிடைக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விஜய் டிவியில் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருவது வாடிக்கைதான். ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் தொடங்குவதும் வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக விஜய் டிவியில் யார் அடுத்த கதாநாயகி என்ற ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் பல நடிகர்கள், பிரபலங்கள் சினிமாவில் தங்களுக்கு வாய்ப்பு குறையும் நேரத்தில் சின்னத்திரையை நோக்கி படையெடுப்பது பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பல்முக திறமையை கொண்ட கே எஸ் ரவிக்குமார் முதல் முறையாக சின்னத்திரையில் ஒரு நடுவராக களம் இறங்குகிறார்.

விஜய் டிவியில் பாடல் நிகழ்ச்சி, டான்ஸ் நிகழ்ச்சி இருப்பது போன்று இப்போது கதாநாயகி தேடும் படலத்தை தொடங்கி இருக்கின்றனர். அதில் வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் காரில் இருந்து கே.எஸ் ரவிக்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் இறங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அவரை வரவேற்கும் மக்கள் தொடர்ச்சியாக அவர்களிடம் எங்கள் கண்ணம்மாவை போலவோ, காவியா போலவோ, அடுத்த பாக்யா போலவோ ஒரு நபரை தேர்ந்தெடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். அதற்கு கே.எஸ் ரவிக்குமார் எந்த மாதிரி கதாநாயகி தேடுவது என்பது பெரிய வேலையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல, ராதிகா சரத்குமார் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பு இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி வருவது நன்றாக இருக்கிறது என்றும் பலர் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இந்த ஒரு நிகழ்ச்சி வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என கூறி வருகின்றனர். அதே நேரத்தில் முதல் முறையாக கே.எஸ் ரவிக்குமார் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் நடுவராக வந்திருப்பதால் நிகழ்ச்சி களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.

Related Post