நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உடன் நடிகை வனிதா விஜயகுமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்த வீடியோக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் ரசிகர்களை கவர்ந்த வனிதா விஜயகுமார் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் சினிமா என பிசியாகி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மொழிப் படங்களிலும் அதிகளவில் நடித்து வருகிறார்.
பார்த்திபன் உடன் வனிதா விஜயகுமார்: நடிகர் பார்த்திபன் உடன் வனிதா விஜயகுமார் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வனிதா விஜயகுமார்.
பார்த்திபனின் காக்கை சிறகினிலே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது சந்தித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பி. வாசு, சந்திரமுகி 2 என்றெல்லாம் குறிப்பிட்டு அந்த படத்திலும் வனிதா இருக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.
மகளுக்கான அப்ளிகேஷனா?: நடிகை வனிதா விஜயகுமார் விரைவில் தனது மூத்த மகளான ஜோவிக்காவை ஹீரோயினாக்கும் முயற்சியில் இறங்கி உள்ள வனிதா விஜயகுமார் பல திரை பிரபலங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகிறார்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை வனிதா சந்தித்துள்ள நிலையில், பார்த்திபனின் அடுத்த படத்தில் வனிதா விஜயகுமார் மகள் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இணைந்து நடித்தால்: முன்னதாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும், அந்த படத்தில் ஜோவிகா தான் ஹீரோயின் போன்ற கிசுகிசுக்களும் கிளம்பின. ஆனால், இயக்குநர் அவதாரத்தை சஞ்சய் எடுத்துள்ள நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வனிதா விஜயகுமார் பார்த்திபன் சந்திப்பு என்ன விஷயத்திற்காக இருக்கும் என ஏகப்பட்ட கெஸ்ஸிங் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இருவரும் இணைந்து நடித்தாலும் சூப்பரான பர்ஃபார்மன்ஸை ரசிகர்கள் பார்க்கலாம் என்கின்றனர்.