இப்போவும் நான் தான் “Opening King” அசைக்க முடியாத இடத்தில் அஜித்..! – திணறும் லியோ..!

post-img

தமிழ் சினிமாவில் ஓப்பனிங் கிங் என்றால் அது நடிகர் அஜித்குமார் தான். இது தற்போது தொடர்கிறது என்பதுதான் இங்கே விஷயம்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
விண்ணை தொட்ட எதிர்பார்ப்பு என்று கூறலாம். அந்த அளவுக்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை பார்க்க முடிகிறது.


இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் செட் செய்த ரெக்கார்டை உடைக்க முடியாமல் திணறி வருகிறது லியோ திரைப்படம்.
வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 957 திரைகளில் வெளியானது. ஆனால், லியோ திரைப்படம் தற்போது வரை 850 திரையரங்குகள் மட்டுமே பெற்று இருக்கிறது.


லியோ திரைப்படம் நாளை (அக்.19) வெளியாக உள்ள நிலையில் இன்னும் 20 திரைகள் கூடுதலாக கிடைக்கலாம் எனவும், ஆனால் 900 திரைகள் என்ற இலக்கை கூட லியோ திரைப்படம் எட்டாது என கணித்திருக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் ஜோதிடர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் மோதிய போதும் கூட நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தன. முதல் நாள் வசூலும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு தான் அதிகமாக கிடைத்தது.


நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதி இப்போதும் நான் தான் ஓப்பனிங் கிங் என்பதை நிரூபித்தார் நடிகர் அஜித்குமார்.
தற்போது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் இருக்கும் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும். நான் தான் ஓப்பனிங் கிங் என்பதை ஆணித்தரமாக அடித்து கூறி இருக்கிறார்.
லியோ திரைப்படத்திற்கான திரைகளின் எண்ணிக்கை கூடுமா..? வலிமை ரெக்கார்டை தகர்க்குமா லியோ..? பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

 

Related Post