இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்புகள் லாஸ்லியாவுக்கு குவிந்த நிலையில், அவர் நடித்த படங்கள் எல்லாம் ஃபிளாப் ஆன நிலையில், அடுத்ததாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அப்படியே நின்று போயின.
ஸ்லிம்மான லாஸ்லியா: பப்ளி நடிகையாக தமிழ் சினிமாவில் பிரெண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியான லாஸ்லியா அதன் பின்னர் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷன் உடன் ஜோடிப் போட்டு நடித்தார்.
சில விளம்பரப் படங்களில் நடித்த லாஸ்லியா, ஸ்லிம்மானால் சினிமா வாய்ப்புகள் குவியும் என நினைத்தாரோ என்னமோ தனது உடல் எடையை ஸ்லிம்மாக்க ஜிம்மே கதியென கடந்து உடல் எடையை குறைத்தார்.
ஜிம் டிரெய்னருடன் நெருக்கம்: நடிகை லாஸ்லியா ஜிம் டிரெய்னருடன் எடுத்த ஏகப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், ஜிம் டிரெய்னரை காதலிக்கிறாரா என கிசுகிசுக்கள் கிளம்பின. ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்தன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கவினை காதலித்து வந்த லாஸ்லியா அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை பிரேக்கப் செய்து விட்டு பிரிந்த நிலையில், அது வெறும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நடைபெற்ற டிராமா காதலா? என கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மாடியில் டான்ஸ்: இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோக்களையும் ரீல்களையும் பதிவிட்டு வரும் லாஸ்லியா எப்படியாவது அடுத்த படத்திற்கான வாய்ப்பை பெற்று விடும் நோக்கில் இதையெல்லாம் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனால், தனக்காக இருக்கும் 1.7 மில்லியன் ரசிகர்களுக்காக அடிக்கடி இப்படி ரீல் வீடியோக்களை லாஸ்லியா போட்டு ஹேப்பி ஆக்கி வருகிறார். இந்நிலையில், மொட்டை மாடியில் சுடிதார் அணிந்துக் கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தேவதை மாதிரி இருக்கீங்க: சுடிதார் போன்ற ஹோம்லி டிரெஸ் தான் உங்களுக்கு சூட் ஆகுது லாஸ்லியா என்றும் இந்த உடையில் அப்படியே தேவதை போல இருக்கீங்க லாஸ்லியா என்றும் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து நல்ல ஹிட் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/p/Ct4CeaTMymR/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
தீபாவளி படத்தில் இடம்பெற்ற "காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்" பாடலின் இடையே வரும் "தேவதை கதை கேட்கும் போதெல்லாம்" என்கிற வரிகளை போட்டு அதற்கு ஏற்றார் போலவே தேவதையாக நடனமாடி உள்ளார் லாஸ்லியா.