இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், விரைவில் தனது 7வது சீசனை துவங்கவுள்ளது.
இந்த சீசனில் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து, தூள் கிளப்பப்போகும் போட்டியாளர்கள் லிஸ்ட் தற்போது தயாராகி வருகிறது.
விரைவில் துவங்கும் பிக்பாஸ் சீசன் 7:
விஜய் டிவியின் அதிரடி நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியையே ரசிகர்கள் சுட்டிக் காட்டுவார்கள். இந்த நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் 7வது சீசன் துவங்கவுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகளை விஜய் டிவி தற்போது முடுக்கி விட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரங்களில் ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி எப்போதும் காணப்படும். பிக்பாஸ் வீட்டில் ஏறக்குறைய 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்படவுள்ள நிலையில், அதில் சினிமா பிரபலங்கள், டிவி பிரபலங்கள், தொகுப்பாளர்கள், திருநங்கை, விளையாட்டுத்துறை பிரபலங்கள் என ஒவ்வொரு துறையிலும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடந்த 6 சீசன்களாக ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசன் இந்த ஆண்டு ஜனவரியில்தான் நிறைவடைந்தது. தாமதமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நிறைவடையவும் தாமதம் ஆனது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் இல்லாமல் முன்னதாகவே ஆகஸ்ட் மாதத்திலேயே துவங்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரியில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசீமிற்கு இடையில் அதிகமான போட்டி ஏற்பட்டு, இறுதியில் அசீம் டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றி ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. விக்ரமனுக்கு அதிகமான ஆதரவு காணப்பட்ட நிலையில், துவக்கம் முதலே ரசிர்களின் அதிகமான அதிருப்தியை சம்பாதித்த அசீம் வெற்றியாளரானது தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஆகஸ்ட் மாதத்திலேயே துவங்கவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். நிகழ்ச்சியில் போட்டியிடவுள்ள போட்டியாளர்கள் குறித்து அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.