பொதுவாக தமிழ் சினிமாவிற்கு கேரளாவில் இருந்து படையெடுத்து வரும் நடிகைகள் இங்கு தங்களின் அழகால் கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டு முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொள்ளவர்கள்.
அடக்கமான அறிமுகம்:
அப்படிதான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகை நயன்தாரா ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
மலையாள சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் பின்னர் நடிகையான நயன்தாரா சொந்த மொழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் தமிழ் நாட்டில் வந்து தஞ்சம் அடைந்துவிட்டார்.
அப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கைகொடுத்த கவர்ச்சி:
பின்னர் அஜித்துடன் பில்லா 2 படத்தில் டோட்டலாக வேறுமாதிரி காணப்பட்டார் நயன்தாரா. அதில் படு கவர்ச்சியான பிகினி உடையில் வந்து ரசிகர்களை திணறவைத்தார்.
அடுத்தடுத்து விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா, சிம்புவுடன் வல்லவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழில் அசுர வளர்ச்சி கண்டார்.
இதனிடையே காதலில் சிக்கி சர்ச்சைக்குள்ளாகி சில வருடம் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின் அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்:
அந்த படம் மாபெரும் ஹிட் அடிக்கவே எந்த ஒரு இடைவேளையும் இல்லாமல் அடுத்தடுத்து பிசியாக நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
இதனிடையே விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
கவர்ச்சி தெறிக்கும் விளம்பரம்:
தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நயன்தாரா இந்தியில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தற்ப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விளம்பரங்களில் படுகவர்ச்சியாக நடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.