விஜய் –த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம் முடிவுக்கு வந்தது ... சம்பவம் இதுதானாம்!

post-img

விஜய் – த்ரிஷா டேட்டிங் செய்வதாக கூறி சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை இருவரின் ரசிகர்களும் நம்பத் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி, குருவி ஆகிய படங்களில் இந்த ஜோடியின் நடிப்பும், கெமிஸ்ட்ரியும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

2008 இல் குருவி வெளியானதற்கு பின்னர் தற்போதுதான் லியோ படத்தில் இந்த ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக இருவரும் காஷ்மீரில் 2 மாதங்களாக தங்கியிருந்தனர்.

தற்போது விஜய் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்திற்காக தயாராகி வருகிறார். இதையொட்டி சின்னதாக ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ளார் விஜய். இன்னொரு பக்கம் த்ரிஷா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாவில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும்  ஷாப்பிங் மால் ஒன்றில் இருப்பது போன்ற ஃபோட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விஜய் – த்ரிஷா இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவியதுடன் அதனை உண்மை என்று நினைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் செய்திருந்தனர். இந்நிலையில், அந்த புகைப்படம் லியோ படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சமூக வலைதள கணக்கிடம், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ காப்பி ரைட்ஸ் உரிமை கோரியுள்ளது. இதன் மூலம் இந்த படம் லியோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டதுதான் என்பது தெரியவந்துள்ளது.

Related Post