அமுதாவை வெட்ட வந்த ரவுடிகள் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

post-img

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அமுதா ஒரு வழியாக வெளியே வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, செந்தில் பாட்டியிடம் ஸ்கூல்ல ஒரு சின்ன பிரச்னை.. அதான் அமுதா வர லேட்டாயிடுச்சு என சொல்கிறான். அடுத்து மாணிக்கம் அமுதாவிடம் நடந்தவற்றை கேக்க, அமுதா நடந்தவற்றை சொல்கிறாள்.

அமுதா ஜட்ஜ் எப்படி ஸ்டேஷனுக்கு வந்தார் என தெரியவில்லை நீங்க ஏதாச்சும் போன் பண்ணுனீங்களா என கேக்க, மாணிக்கம் இல்லம்மா என சொல்லிவிட்டு செந்திலை பார்க்க ப்ளாஷ் கட்டில் செந்தில் ஜட்ஜுக்கு போன் செய்ய அவர் யாரென கேக்க, அமுதா புருஷன் என சொல்கிறான். மேலும் அமுதாவுக்கு ஒரு பிரச்சனை உடனே வர வேண்டும் என்று சொல்ல ஜட்ஜ் அவனிடம் எந்த பிரச்சனையும் அவளுக்கு வராம பார்க்க வேண்டியது நீ தானய்யா என்னை எதுக்கு கூப்பிடுற என கேக்க, செந்தில் நடந்தவற்றை சொல்ல, சரி நான் வர்றேன் என சொல்கிறார்.

அடுத்ததாக இன்ஸ்பெக்டர் மாணவனின் அப்பாவிடம் உன்னால எனக்கு பிரச்சனை ஆகிப் போச்சு, நீ குடுத்த காசை வாங்குனதுனால நான் மாட்டிகிட்டேன்.. என் வேலை போயிருக்கும் என திட்ட மாணவன் அப்பாவிடம் இனிமே நான் எப்படி ஸ்கூலுக்கு போக முடியும் என சொல்ல, அப்பா அவனிடம் அதுக்கு வேற வழி இருக்கு, எனக்கு எந்த ரூட்டுல போனா அவளை முடிக்கனும்னு தெரியும் என சொல்கிறார்.

பிறகு அந்த மாணவன் அமுதாவை பார்த்து நாளைல இருந்து நீ ஸ்கூலுக்கு வர மாட்ட என சொல்ல அமுதா புரியாமல் பார்க்கிறாள். பிறகு அமுதா வெளியே வர ஆட்கள் அவளை பாலோ பண்ணுவதை பார்க்கிறாள். அமுதா வேகமாக ஓடி கொண்டே போனை எடுத்து செல்வாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள்.

செல்வா அவளிடம் ஒரு இடத்தை நோக்கி வரச்சொல்ல ஒரு கார் வந்து நிற்பது.. அது செல்வாவின் ஆட்கள் என அமுதா நினைக்க, அது மாணவனின் ஆட்கள் , அவர்கள் அரிவாளை எடுத்து அமுதாவை வெட்டப் போக

ஒரு கை வந்து தடுக்க அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க, பாட்டி நிற்கிறார்.. பாட்டி ரவுடிகளை அடி வெளுத்து எடுக்க செல்வா தனது காரில் ஆட்களுடன் வந்து இறங்கியவர் பாட்டியை பார்த்து ஆச்சரியமாகிறார்.

பாட்டி செல்வாவிடம் பொண்ணுன்னா குடும்பத்தையும் பார்த்துக்கனும் தனக்கு ஒரு ஆபத்துன்னா தன்னந்தனியா போராடனும் என சொல்கிறார். மேலும் செல்வா அமுதாவிடம் என்ன பிரச்சனை என கேக்க, அமுதா நடந்ததவற்றை சொல்கிறாள். செல்வா தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி

அந்த மாணவனின் வீட்டிற்கு வந்து அவனது அப்பாவை அடி வெளுத்து இனிமே ஸ்கூல்ல பொண்ணுங்க கிட்ட வம்பு வச்சுகிட்ட உயிரோட கொளுத்திபுடுவேன் என மிரட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Post