இந்திய சினிமா-க்களில் ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சின்னதிரையிலும் பல பிரபலமான நட்சத்திரங்கள் ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு பல லட்சத்தை சம்பளமாக வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக பாலிவுட்-ல் சின்னதிரை நிகழ்ச்சிக்கு அதிகப்படியான வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும் காரணத்தால் பல நட்சத்திரங்கள் ஒரு வருடத்திற்கு சில பல கோடிகளை நிகழ்ச்சியின் வாயிலாகவே சம்பளமாக வாங்குகின்றனர்.
இதை தாண்டி சோஷியல் மீடியாவில் ப்ரோமோஷன், விளம்பரம், கடை திறப்பு,பெரிய வீட்டு நிகழ்ச்சிக்கு வருவது, அரசியல்வாதிகளுக்கு ஆதரவு என வருடத்திற்கு 10-20 கோடி ரூபாய் வரையிலான தொகையை சம்பாதிக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பாலிவுட் முதல் கோலிவுட் வரையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டுமொத்த ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை ஓவ்வோரு வருடமும் ஓரம்கட்டி டிஆர்பி-யில் உச்சத்தை தொடும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். தமிழில் எப்படி கமல்ஹாசன் வருகிறாரோ அப்படி ஹிந்தியில் சல்மான் கான். தமிழை போலவே ஹிந்தியிலும் சல்மான் கான் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தொகுத்து வழங்குவார்.
இந்த 2 நாள் நிகழ்ச்சிக்கான பெயர் Weekend Ka Vaar. இந்த 2 நாளுக்கு சுமார் 25 கோடி ரூபாய் அளவிலான தொகையை சம்பளமாக வாங்குகிறார் சல்மான் கான், அதாவது ஒரு நாள் ஷூட்டிங்-கிற்கு 12.5 கோடி ரூபாய்.
பல நேரம் 2 நாள் ஷூட்டிங்-ஐ ஒரே நாளில் எடுப்பதாகவும் கூறப்படுகிறது, இப்படியிருந்தாலும் Weekend Ka Vaar-ன் 2 எபிசோட்களுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் சல்மான் கான். இந்தியாவில் தென் மாநிலங்களை பிற மாநிலங்களை பாலிவுட் அல்லது ஹிந்தி திரைப்பட சந்தையாக பார்க்கப்படும்.
இதனால் சல்மான் கான் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஹிந்தி பிக் பாஸ் 20 - 25 மசாலாக்களை தூவி ஒளிபரப்படும் காரணத்தால் பார்வையாளர்களை அள்ளுகிறது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாளில் சல்மான் கான் வரும் எபிசோட்களுக்கு வழக்கத்தை காட்டிலும் அதிகமாக மக்கள் பார்க்கும் காரணத்தால் சல்மான் கான்-க்கான டிமாண்ட் முக்கியத்துவம் அதிகரித்து இரு எபிசோட்களுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
இதே நேரத்தில் தமிழில் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மொத்தமாகவே 75 கோடி ரூபாய் தான் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த ஆண்டு 135 கோடி ரூபாய் அளவிலான தொகையை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படி பார்த்தாலும் சல்மான் கான் சம்பளத்தை நெருங்க முடியாது.