பாலிவுட் நடிகர் ஷாருகானின் பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மெகா ஹிட்டானது. சுமார் 225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இயக்குநர் அட்லீ ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லீ இம்முறை பாலிவுட் கிங் ஷாருகானை வைத்து பான் இந்தியா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஜவான் திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அட்லீ படம் என்றாலே மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அதிலும் தற்போது ஷாருகான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து பட இயக்கியுள்ளது மிக பெரிய எதிர்பார்ப்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் எழவைத்துள்ளது.