விஜய் தேவரகொண்டாவுக்கு சரியான கம்பேக்.. குஷி ட்விட்டர் விமர்சனம் இதோ!

post-img

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தாவுக்கு சரியான கம்பேக் படமாக குஷி திரைப்படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். குஷி திரைப்படம் பிளாக்பஸ்டர் என #BlockBusterKushi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பாலாபிஷேகம், பட்டாசு என ரவுடி ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா கொண்டாட்டத்தை தூள் கிளப்பி வருகின்றனர்.

5 வருஷத்துக்கு அப்புறம் ஹிட்: நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு காத்துக் கிடந்த நிலையில், காலையில் இருந்தே ஏகப்பட்ட போன் கால் மற்றும் நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் வந்து விட்டன. அனைவருமே படத்தை கொண்டாடி வருவது எனக்கு ரொம்பவே சந்தோஷத்தை தருகிறது. கடைசியாக ஜெயித்து விட்டேன் என்கிற நம்பிக்கை வருகிறது என விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் கம்பேக்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான லைகர் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது குஷி படத்தின் மூலம் வெற்றி கிடைத்து விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா சரியான கம்பேக் கொடுத்து விட்டார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

திருமண சீன்: ஒரு படத்தில் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய தேவையான காதல், குட்டி சண்டை, சந்தோஷம் என அனைத்துமே குஷியில் உள்ளன.விஜய் தேவரகொண்டாவுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடக்கும் அந்த சீன் எல்லாமே வேறலெவல் என ரசிகர்கள் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

3.5 ஸ்டார் ரேட்டிங்: குஷி படம் பக்கவான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக அமைந்துள்ளது என்றும் இயக்குநர் ஷிவ நிர்வாணா விஜய் தேவரகொண்டாவையும் சமந்தாவையும் ஏமாற்றாமல் நல்ல படத்தைக் கொடுத்து ஒரு வழியாக சந்தோஷப்படுத்தி உள்ளார்.

ஆவரேஜ் தான்: விஜய் தேவரகொண்டா, சமந்தா ரசிகர்களுக்கு வேண்டுமானால் படம் பிடிக்கும். ஆனால், பெரிதாக படத்தில் வலுவான திரைக்கதை இல்லை என்றும் இந்த படம் ஆவரேஜ் தான் என விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

Related Post