பெரிய நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்ததாக சீரியல் நடிகை ரீஹானா பகீர் தகவலை கூறியுள்ளார்.
நடிகை ரீஹானா நடிகை சன் தொலைக்காட்சியில் ஆனந்தராகம் சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
அதிரடி பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடியவரான இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இடையே நடந்து வரும் பிரச்சனை குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி இருந்தார்.
பெரிய சர்ச்சை: சீரியல் நடிகை திவ்யா அர்னவ் மீது அடுக்கடுக்கான புகாரை கூறியிருந்தார். இதையடுத்து, அர்னவ், திவ்யாவின் வாட்ஸ் அப் சேட்,இன்ஸ்டாகிராம் சேட் போன்றவற்றை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகாரை கூறி வந்தனர். இருவரின் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமாக இருந்தது.
நடிகை ரீஹானா பேட்டி: இந்த விவகாரம் குறித்து நடிகை ரீஹானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இதில் பேசிய அவர், எந்த இடத்திற்கு சென்றாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற ஒரு விஷயம் இருக்கத்தான் செய்யும், அது பிரபலமாக இருப்பதால் அது அப்பட்டமாக வெளியில் தெரிந்து விடுகிறது என்றார். மேலும், பெரிய நடிகர் ஒருவடன் நடித்துக்கொண்டு இருந்தேன்.
பெரிய ஹீரோ வழிந்தார்: பெரிய நடிகராக இருந்தாலும் அவர் நிறைய டேக் எடுத்துக்கொண்டே இருந்தார். ஆனால் ஒன் டேக்கில் நான் நடித்து முடிச்சிட்டு என் இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டேன். அப்போது அந்த பெரிய ஹீரோ என்னிடம் வந்து என்னை பாராட்டி வழிந்து பேசினார். பின் உங்க நம்பர் கொடுங்க என்று கேட்டார். நானும் ஒரே துறையைச்சேர்ந்தவர்கள் என்பதால் என் நம்பரை கொடுத்தேன்.
அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்தார்: உடனே அந்த பெரிய நடிகர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். அந்த மெசேஜில என்னை வர்ணித்து இருந்தார். அந்த நடிகர் எனக்கு நைசாக நூல் விட்டுப் பார்த்தார் என்பதை புரிந்து கொண்டு. நான் நோ என்று கூறாமல் அவரிடம் பேசி அவரை புரிந்து கொண்டு அவரை பிளாக் செய்துவிட்டேன். இதையடுத்து, ஃபேஸ்புக்கில் வந்து மெசேஜ் செய்தார். அதன்பின் நான் நோ கூறிவிட்டேன். இதையடுத்து சீனில் இருந்தே என்னை தூக்கிவிட்டார் என்று சீரியல் நடிகை நடிகை ரீஹானா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.