எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வில்லங்கமான அல்லது சர்ச்சையான கருத்துக்களை பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.
தற்போது இவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் 'எமர்ஜென்சி' படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
நடிகை கங்கனா ரனாவத்:35 வயதான கங்கனா ரனாவத் 2006 வாக்கில் சினிமாவில் என்ட்ரியானார். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்திருந்தார். தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்த கங்கனா மீண்டும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கணவன் மனைவி போல நடிக்கின்றனர்: அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் கங்கனா, பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், அந்த இந்தி நட்சத்திர ஜோடி பிரம்மாண்டமாக ஊரைக்கூட்டி திருமணம் செய்து கொண்டாலும், இருவரும் இப்போது வேறு வேறு மாடியில்தான் வசிக்கிறார்கள். ஆனால், வெளி உலகத்திற்கு சேர்ந்து இருப்பது போல் காட்டிக் கொள்கின்றனர்.
பணத்திற்காக திருமணம்: சமீபத்தில் அவர் குடும்ப உறுப்பினர்களோடு லண்டன் சென்றார். ஆனால் மனைவி ஆலியா,மகளை அழைத்து செல்லவில்லை. இருவரும் இந்தியாவில் தனியாகவே இருந்தனர். பணத்திற்காக திருமணம் செய்து கொண்டால் இப்படி தான் நடக்கும். நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை. மாஃபியா நெருக்கடியால் தான் திருமணம் செய்து கொண்டார். இந்த போலியான திருமணத்தை முடித்துக்கொள்ள முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என கங்கனா குறிப்பிட்டுள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.