விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை நான்சி ஜெனிபர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
Courtesy: instagram
2004 ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, பிராகேஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'கில்லி' . இப்படம் வெளியாகி மெகா ஹிட்டானது. இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் பாடல்கள் ஓவென்றும் ரசிகர்களை கவர்ந்தது.
Courtesy: instagram
விஜய்யின் சினிமா பயணத்தில் இப்படம் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 90ஸ் கிட்ஸ் விஜய் ரசிகர்களின் ஃபேவரட் படமாக இருந்து வரும் கில்லி படத்தில், விஜய்க்கு தங்கையாக நடிகை ஜெனிபர் நடித்திருப்பார்.
Courtesy: instagram
அண்ணனை வம்புக்கு இழுக்கும் சுட்டி தங்கையாக ஜெனிபரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற, ஜெனிபரை இன்றளவும் ரசிகர்கள் மறவாமல் இருந்து வருகின்றனர். விஜய்யின் கில்லி படத்தில் நடிப்பதற்கு முன் ஜெனிபர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
Courtesy: instagram
ஆனால் கில்லி படத்தின் மூலமாகவே இவர் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெனிபருக்கு கில்லி படத்தில் கிடைத்த வரவேற்பை போல வேற எந்த படத்திலும் கிடைக்கவில்லை. மேலும் இவர் திரைப்படங்களில் மட்டுமன்றி ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
Courtesy: instagram
மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நான்சி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களின் லைக் மற்றும் கமெண்டுகளை அள்ளி வருவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் நான்சி பதிவிட புகைப்படம் இணையவாசிகள் கவிதை ஈர்த்து வருகிறது.
Courtesy: instagram
கில்லி படத்தில் வரும் விஜய்யின் தங்கையை மறந்திடாத இளைஞர்கள், நான்சியின் புகைப்படத்தை கண்டு வர்ணித்து வருகின்றனர். அவங்களா இது?, ஆளே மாறிட்டாங்களே, அழகா பப்லியா இருக்காங்களே! என்று தங்களுக்கு தெரிந்த வசனங்களை நான்சியின் புகைப்படத்திற்கு கமெண்ட் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.