விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் புதிய மைல்கல்.. குவியும் வாழ்த்துகள்!

post-img

விஜய் டிவி-யின் சிறகடிக்க ஆசை சீரியல் 100 எபிசோட்களைக் கடந்துள்ளது.

பிரபலமான தினசரி சீரியல் சிறகடிக்க ஆசை, அதன் சுவாரஸ்யமான கதைக்களம் மற்றும் திறமையான நட்சத்திர நடிகர்களுக்கு பெயர் பெற்றது. தற்போது அதன் முதல் மைல்கல்லை எட்டியுள்ளது. ஆம் தற்போது இத்தொடர் 100 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது. நெட்டிசன்களும் ரசிகர்களும் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை உருவாக்கியுள்ளனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து சிறகடிக்க ஆசை குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நிகழ்ச்சியின் புதிய மைல்கல் குறித்து நடிகை கோமதி பிரியா பேசுகையில், "சிறகடிக்க ஆசை போன்ற அற்புதமான சீரியலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் 100வது எபிசோடை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

அதே சமயம் வெற்றி வசந்தும் மகிழ்ச்சியில் இருக்கிறார். "இயக்குனர் குருசம்பத் குமார் சாருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறகடிக்க ஆசையின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்" என்று அவர் கூறினார்.

சிறகடிக்க ஆசை

இயக்குநர் குரு சம்பத்குமாரும் இது குறித்து உற்சாகமாக இருக்கிறார். ”சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முதல் மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்தத் தொடரின் முழுமையான 'பயணம்' என் கேரியருக்கு உயிர் கொடுத்தது" என்றார்.

சிறகடிக்க ஆசை என்ற தொலைக்காட்சி சீரியல் ஜனவரி 2023-ல் ஒளிபரப்பை தொடங்கியது. இந்த சீரியலில் கோமதி பிரியா மற்றும் வெற்றி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆர். சௌந்தரராஜன், அனிலா, நரசிம்ம ராஜு, தமிழ்செல்வி, ஸ்ரீ தேவா, யோகேஷ், ஏ ரேவதி, திவாகர், உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Post