நடிகர் எம்.ஆர். ராதாவின் மகளான நிரோஷா இயக்குநர் மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையான நிரோஷா கமல்ஹாசன் உடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக ரஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.
லால் சலாம் படத்தில் நிரோஷா:
நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்ட நிரோஷா சினிமாவில் சீனியர் நடிகையான நிலையில், காமெடி நடிகையாக சில படங்களில் நடித்து வந்த நிலையில், சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நிரோஷா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.
ரஜினிக்கு ஜோடி:
இளம் வயதில் பிரபு, கார்த்தி, ராம்கி, கமல் என பல ஹீரோக்களுடன் நடித்துள்ள நிரோஷா சூப்பர் ஸ்டார் உடன் மட்டும் ஜோடி போட்டு நடிக்க முடியவில்லை என்கிற வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் மனைவியாக நிரோஷா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நன்றி:
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு நடிகை நிரோஷா நன்றி தெரிவித்துள்ளார்.
தனது நீண்ட நாள் கனவு நனவானது என்றும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சூப்பர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு என் நன்றி என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லால் சலாம் ரிலீஸ் எப்போ:
ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், கெளரவ தோற்றத்தில் ரஜினிகாந்த், கபில் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்தின் ஜெயிலர் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு டபுள் ட்ரீட் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.