ஏழை, எளிய மக்களின் குரலின் ... மாவீரன் படத்திற்கு திருமாவளவன் ரிவியூ..!

post-img

சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ஏழை எளிய மக்களின் குரலை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இயக்குனர் மடோன் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா மாவீரன் திரைப்படத்தை மிகவும் வித்தியாசமான கதை அமைப்புடன் தயாரித்து உள்ளனர் எனவும், கதைகள் மிக சிறப்பாக பின்னப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

சென்னையில் ஏழை எளியவர்களின் பற்றிய கதையாகவும் சென்னை கூவம் ஓரத்தில் வசிக்கும் மக்கள் புலம்பெயர் மக்கள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டு சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அவருக்கு வழங்கப்படும் குடியிருப்பின் தரம் மற்றும் அரசியலை இந்த திரைப்படம் குறிக்கிறது எனவும், படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார் சில காட்சிகளில் கண்கலங்க நேர்ந்தது எனவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர் கதாநாயகன் ஆளுமை மிக்கவனாக திரைப்படங்களில் காட்டப்படும் ஆனால் இதில் கதாநாயகன் பயந்த சுபாத்துடன் நடித்திருப்பது எதார்த்தமாக இருக்கிறது எனவும், மக்களின் குரலை பிரதிபலிப்பாக மாவீரன் திரைப்படம் உள்ளது, சென்னையில் பல பகுதிகளில் அரசு கட்டிடங்கள் எப்பொழுதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது அதனை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த படம் இயக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய திருமாவளவன் படத்தின் இயக்குனரை பெரிதும் பாராட்டினார்.

Related Post