மண்டேலா படத்தின் இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க மாவீரன் என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிதுள்ளார். மேலும் படத்தில் சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என வெளியாகவுள்ளது. இந்தப் படம் நாளை வெள்ளிக்கிழமை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
புட் சட்னி யூடியூப் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் 'பாபா பிளாக்ஷீப்'. அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை வெள்ளிக்கிழமை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திகிலும் மர்மமும் நிறைந்த கதையம்சத்தில் நேற்று நான்.. இன்று நீ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார். இதில் புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா ஆகியோருடன் ஆர்.அரவிந்தராஜ், பிஜாய் மேனன், எச். பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படம் நாளை வெள்ளிக்கிழமை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.