என்னை தவறாக நினைக்க வேண்டாம். விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு-புகழ்

post-img

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு ரியாலிட்டி ஷோவாகும். இந்த நிகழ்ச்சியில் 12 குக்குள் கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்ய 12 கோமாளிகள்.

நடுவர்கள் வெங்கடேஷ் பட், தாமோதரன் கூறும் டிஷ்களை இவர்கள் சமைப்பார்கள். அதில் யாருடைய டிஷ் நன்றாக இல்லையோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். இந்த நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீசனாக நடந்து வருகிறது.

இதில் ஏற்கெனவே கோமாளியாக இருந்த மணிமேகலை விலகிவிட்டார். பாலா இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. கடந்த சீசனில் கலந்து கொள்ளாமல் சினிமாவில் பிஸியாக இருந்த புகழ் இந்த சீசனில் உள்ளார். சிவாங்கி, குரேஷி உள்ளிட்டோர் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிவாங்கி குக்காக பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சி சிரிப்பு, விறுவிறுப்பு, காமெடி என நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் கோமாளிகளை குக்குடன் பேரிங் செய்ய நிறைய யுத்திகளை நடுவர்கள் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு எபிசோடிலும் குக்தான் கோமாளியை தேர்வு செய்வார். அதிலும் நேரடியாக பார்த்து அல்ல. சில சமிக்ஞைகள் கொடுக்கப்படும்.

உதாரணமாக சுவற்றில் பலூன் இருக்கும் அதை சுட்டால் அங்கு ஒரு எண் இருக்கும். அந்த எண் எந்த கோமாளிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவரே அந்த குக்குக்கு இந்த வாரத்திற்கான கோமாளியாவார். அதுபோல் ஒவ்வொரு முறையும் கோமாளிகள் ஒவ்வொரு கெட்டப்பில் வருவார்கள். குக்குகளுக்கு ஒவ்வொரு படத்தின் கேரக்டர்கள் கொடுக்கப்படும். அதில் தேர்வு செய்யும் கேரக்டரை எந்த கோமாளி போட்டிருக்கிறாரோ அவருடன் இவர் பேர் ஆவார்.

Vijay TV Pugazh asks apology to Actor Vijays fans

அந்த வகையில் புகழ் இந்த வாரம் கில்லி படத்தில் வரும் விஜய் கெட்டப் போட்டிருக்கிறார். அவரது பரந்து விரிந்துள்ள கூந்தலை அள்ளி முடிந்து அதன் மேல் விஜய்யை போல் ஒரு விக் வைத்துள்ளார். அவரை சக போட்டியாளர்கள் அடித்து உதைத்துள்ளனர். குறிப்பாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, வெங்கடேஷ் பட் ஆகியோர் புகழை புரட்டி எடுத்தனர்.


இந்த நிலையில்தான் புகழ் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அனைத்தும் கற்பனையே என புகழ் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் மகேந்திரன், சிரிப்பு எமோஜியை போட்டு பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்படி ஒன்று சொல்லிடு என குறிப்பிட்டுள்ளார்.


Related Post