விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பலரையும் கவர்ந்தவர்.
தற்போது இவர், தொலைக்காட்சி, சினிமா என இரண்டிலும் கலக்கி வருகிறார் ரோபோ ஷங்கர் : வெள்ளித்திரையில் ஏராளமான நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் ரோபோ சங்கர் விஜய்காந்த் போல பேசி, அவரைப்போல உடல்மொழியில் அசத்தி தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். பீல்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே சினிமாவில் மிகப்பெரிய உச்சததை தொட்டுவிட்டார்.
அடுத்தடுத்த படங்களில் : ஜெயம் ரவி நடித்த தீபாவளி படத்தின் மூலம் சினிமா அறிமுகமான ரோபோ ஷங்கருக்கு சிறுசிறு வேடங்கள் தான் கிடைத்து வந்தன. பல ஆண்டுகள் கழித்து தனுஷுடன் மாரி படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பிறகு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார்.
முன்னணி நடிகர்களுடன் : அதன் பின் தமிழ் சினிமாவின் முன்ணி நடிகர்களான அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ 2002 அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்துரஜா : ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் அதிதி ஷங்கரின் தோழியலாக நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் ஒப்பந்தமாக நடித்து வருகிறார்.
குல தெய்வக்கோவில் : இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அண்மையில் குடும்பத்தோடு குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
திருமண தேதி விரைவில் : இதை பார்த்து ரசிகர் இவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்றும் ஜோடி பொருத்தம் நன்றாக உள்ளது என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதற்கு இந்திரஜா, ஆமாம், வீட்டில் பேசியிருக்கிறார்கள் திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, இந்திரஜாக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.