கயல் சீரியலில் தங்கை ஆனந்தி மறைத்து வைத்த உண்மையை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் கயல்.
சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு இத்தொடர் இயக்கப்பட்டு வருகிறது. கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். இதில் கயல் ரோலில் சைத்ரா ரெட்டியும், எழில் ரோலில் சஞ்சீவும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கோபி, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், மீனாகுமாரி, அய்யப்பன், ஹேமா ஸ்ரீகாந்த், அபினவ்யா தீபக், ஜானகி தேவி, ராஜேஷ், தெசினா, முரளிதர் ராஜ், சுமங்கலி, ஃபவாஸ் ஜயானி, கிரண் மாய், ஹென்ஷா தீபன், ஜெகநாதன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். அதோடு சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடம் பெறும் சீரியல்களில் இதுவும் ஒன்று.
இந்த சீரியலில் எழில் - ஆர்த்தி திருமணம் கடந்த சில எபிசோட்களாக ஒளிபரப்பட்டு வந்தது. நேற்றைய எபிசோடில் தில்லு முல்லு செய்து ஆர்த்தி கழுத்தில் ஆனந்த் தாலி கட்டி எழிலை காப்பாற்றி விட்டார். இதில் ஆர்த்திக்கும் ஏக சம்மதம். ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். வழக்கம் போல் இதற்குக் காரணம் கயல் தான் என ஆர்த்தியின் அம்மா பொங்கினார்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஆனந்தியுடன் கயல் ஒரு அறைக்கு செல்வதையும், அங்கு ஒருவர் இறந்து கிடப்பதும் ஒளிபரப்பாகவிருக்கிறது. இதை முன்பே ஆனந்தி அறிந்திருந்தது கயலுக்கு அதிர்ச்சியை தருகிறது. இந்த மரணத்துக்கும் ஆனந்திக்கும் என்ன சம்பந்தம்? தங்கையை கயல் எப்படி காப்பாற்றுவாள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.