மலேசியாவில் 1942-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி பிறந்த தமிழ் சினிமாவின் கலர் கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் 1986 முதல் துணை வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதற்கு முன்பு 1964 முதல் 79 வரை தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து பல பெண்கள் விரும்பும் ஹீரோவாக திகழ்ந்தவர். இவருக்குள் கண்மூடித்தனமான காதல் ஒன்று சொல்லாமல் வந்து படுத்திய கதையை எந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ரவிச்சந்திரன்..
நடிகர் ரவிச்சந்திரன் வாழ்க்கையில் திருமணம் என்பது இரண்டு முறை நடந்துள்ளது. முதலில் இவர் விமலா என்ற பெண்ணை மனந்திருக்கிறார். இவருக்கு லாவண்யா பாலாஜி மற்றும் ஹம்சவர்தன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவர் மலையாள நடிகையான ஷீலாவை மணந்தார். ஷீலாவை திருமணம் செய்வதற்கு முன்பே இருவர் இடையே காதல் ஏற்பட்டது. அந்த காதல் எப்படி இருந்தது. எப்போது ஏற்பட்டது என்பது பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
நடிகை ஷீலாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான் விஷ்ணு என்ற ஒரு மகன் இருக்கிறார். உருகி உருகி காதலித்த ஷீலாவை ஒரு கட்டத்தில் விட்டு பிரிந்த ரவிச்சந்திரன் மீண்டும் தனது முதல் மனைவியோடு இணைந்தார்.
நடிகர் ரவிச்சந்திரன் முதல் முதலில் 1964 காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு கதாநாயகனாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர்.
நடிகர் ரவிச்சந்திரன்- ஷீலா சொல்லப்படாத காதல் கதை..
தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். ரவிச்சந்திரன் கேரள மலையாள திரைப்படங்களில் பாங்காக தனது நடிப்பை வெளிப்படுத்திய ஷீலா அழகும் திறமையும் மிக்க நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.
இவர் நடிப்பில் வெளி வந்த செம்மீன் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இப்படி தமிழ் திரை உலகில் ரவிச்சந்திரன் மலையாள திரை உலகில் நடிகை ஷீலாவும் குறுகிய காலகட்டத்திலேயே பல்வேறு வெற்றிகளை சுவைத்தவர்கள்.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் இணைந்து போது பழக்கம் ஏற்பட்டு அது நாலாவட்டத்தில் காதலில் முடிந்தது. தும்மல் எவ்வளவு விரைவாக வந்து நிற்கிறதோ அ துபோல இவர்களுக்கு ஏற்பட்ட காதலும் வேகமாக வந்து வந்த வேகத்திலேயே முற்றுப்பட்டு விட்டது என்று சொல்லலாம்.
நடிகை ஷீலா எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த பாசம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதோடு கேரள திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
இப்படி இருக்கின்ற வேளையில் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளிவந்த இதயக்கமலம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலில் நடிக்க கூடிய வாய்ப்பு ஷீலாவுக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்த போது இருவருக்கும் போதுமான அளவு பழக்கம் ஏற்படவில்லை.
எனினும் கேரளத் திரை துறையில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக ஷீலா மாறிய வேளையில் தமிழில் ரவிச்சந்திரன் அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸானார்.
இதைத்தொடர்ந்து கௌரி கல்யாணம் என்ற படத்தில் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த அந்த படத்தில் துணை நடிகையாக ஷீலா நடிக்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது.
இந்த படத்தின் மூலம் ஆரம்பத்தில் இருவர் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு அதன் பின் அது காதலாக பூத்துக் குலுங்க ஆரம்பித்தது. இதனை அடுத்து இருவரும் நெருக்கமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தங்கள் காதலை வளர்த்துக் கொண்டார்கள்.
ஜெயலலிதாவோடு கிசுகிசு..
ஏற்கனவே ரவிச்சந்திரன் ஜெயலலிதா ஒரு நிறைய படங்களில் இணைந்து நடித்திருந்ததார். ஜெயலலிதாவோடு காதல் இருப்பதாக அன்றைய காலகட்டத்தில் பல கிசுகிசுக்கள் வெளி வந்தது.
எனவே ஷீலா மற்றும் ரவிச்சந்திரன் இடையே இருந்த உண்மையான காதல் அப்போது யாருக்கும் தெரியக்கூடிய சூழ்நிலையோ, சந்தர்ப்பமோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் மூன்று எழுத்தில், ஓடும் நதி போன்ற படங்களில் ஷீலாவோடு ரவிச்சந்திரன் இணைந்து நடித்த அவர்கள் காதல் வளர ஆரம்பித்தது. இந்த காதல் நெருக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து ஒரு கட்டத்தில் ஷீலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ரவிச்சந்திரன்.
திருமணம் செய்து கொண்டு ஜார்ஜ் என்ற ஆண் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆன நிலையில் இவர்களது வாழ்க்கை நன்றாக நகர்ந்து செல்ல ஷீலாவின் வற்புறுத்தலின் பேரில் பல மலையாள படங்களிலும் நடித்த ரவிச்சந்திரன் மற்றும் சில இடையே ஈகோ தலை தூக்க சில வருத்தங்களும் சங்கடங்களும் இருவர் மத்தியிலும் ஏற்பட்டு விவாகரத்துக்கு வழி செய்தது