Pinterest
ஒயின் எப்படி வயசு கூட கூட சுவையாகிறதோ.. அதே போல நடிகை ரம்யா கிருஷ்ணன் வயசு கூட கூட கும்மென மாறிக்கொண்டே போகிறார்.
தற்போதும், இளம் நடிகைகளுக்கு இணையாக வருஷத்துக்கு ஐந்து முதல் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா உலகில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.
சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். வயசு ஆகி விட்டாலும் கூட எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற நிலையில் தான் இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தில் தன்னை விட வயது குறைவான இளம் நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் பிட்டு படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இளம் வயதில் சில காலம் தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரம்யா கிருஷ்ணன், நான் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றன. ஹிட் அடித்தன.
இதையும் படிங்க :"காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.." - கடற்கரையில் பிகில் பட நடிகை..!ஆனால், எனக்கு என தனிப்பட்ட முறையில் வெளிச்சம் கிடைக்கவில்லை என்னுடைய நடிப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது போல தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு தன்னுடைய நடிப்பால் கிடைக்கும் சம்பளத்தை தாண்டி மிகப்பெரிய சன்மானம் அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தான்.
சில நேரங்களில் சம்பளம் குறைவாக இருந்தாலும், அங்கீகாரம் பெரிதாக இருக்கும் என்பதால் பல நடிகர்கள் இன்றும் நடித்துக்கொண்டிருகிறார்கள். கோடி கோடியாக பணம் சம்பாதித்து விட்ட பிறகும் நடிகர் ஏன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருகிறார்கள்.
அங்கீகாரத்திற்காக தானே தவிர அந்த படத்தில் நடித்து தான் அவருடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நிலை அவர்களுக்கு இல்லை. தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் எனக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவே தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு அங்கீகாரம் கிடைத்தது என பேசியுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.