தனது காதல் கணவர் ரவீந்தரின் பிறந்த நாளை நடிகை மகாலட்சுமி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. சினிமா தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருப்பதியில் திருமணம் முடித்தனர்.
இருவருக்குமே இது மறுமணம் என்றாலும், இவர்களைப் பற்றி பேசாத நெட்டிசன்களே இல்லை என்ற அளவுக்கு இந்த திருமணம் தொடர்பான தகவல்கள் வைரலாகின. இதற்கிடையே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் பிரியக்கூடும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.
இதுபோன்ற வதந்திகளை மறுத்த ரவிந்தரும் மகாலட்சுமியும், திருமண வாழ்க்கை ஹேப்பியாக செல்வதாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் கணவர் ரவிந்தரின் பிறந்த நாளை நடிகை மகாலட்சுமி உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளர்.
ரவிந்தருக்கு 6 அடி உயரத்தில் அற்புதமான ஃபோட்டோ ஃப்ரேமை பரிசளித்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் மகாலட்சுமி. இதுதொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோவை மகாலட்சுமி வெளியிட லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.