அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

post-img

இந்த படம் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முழு விவரங்கள் இதோ.

அஜித் குமார் - விடாமுயற்சி

விடாமுயற்சி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா நிறுவனம்' மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்

மகிழ் திருமேனி - இயக்குனர்

தடம், தடையற தாக்க போன்ற வெற்றி திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பலரின் கவனத்திற்கு சென்றவர். இவர் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கழக தலைவன்' திரைப்படத்தினை இயக்கியிருந்தார். தற்போது இவர் அஜித் குமார் நடிக்கும் புதிய படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, தமிழ் சினிமாவில் பலர் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார்.

திரிஷா கிருஷ்ணன் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி முக்கிய நடிகை. இவரது திரைப்படங்கள் பெரிய அளவில் தமிழ் திரைரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தில் இவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தினை தொடர்ந்து என்னை அறிந்தால், ஜி, கிரீடம், மங்காத்தா என பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார். திரிஷா - அஜித் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன.

அர்ஜுன் தாஸ் - வில்லன்

மாஸ்டர், கைதி போல திரில்லர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரின் குரல் மற்றும் வில்லனான தோரணையில் கெத்து காட்டி தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். அர்ஜுன் தாஸ் சில படங்களில் இதுவரை நடித்துள்ள நிலையில், இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் உள்ளது. தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நிரவ் ஷஹ் - ஒளிப்பதிவாளர்

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படத்திற்கு பின் அஜித் குமார் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார், நீரவ் ஷா. இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பிரபல முன்னணி ஒளிபதிவர்களில் ஒருவர் ஆவார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஜூன் இரண்டாம் வார தொடக்கத்தில் ஆரம்பமாகிறது. 2023 பொங்கல் பண்டியைக்கு வெளியான அஜித் குமாரின் துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் ஜூன் 2023ல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. ஒருவழியாக விடாமுயற்சி திரைப்படம் தமிழ் சினிமாவில் உருவாவதை கேட்ட அஜித் குமாரின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்குகின்றனர், படக்குழுவினர்.

 
 

Related Post