ஷங்கர், மணிரத்னம் வரிசையில் இடம்பெற்ற நெல்சன்.. ஜெயிலர் கொடுத்த கவுரவம்!

post-img

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர்  நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படம் 500 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து 500 கோடி ரூபாய் கிளப்பில் நெல்சன் திலீப்குமார் தற்போது இணைந்துள்ளார். ஜெயிலர் படம் அவருக்கு சிறப்பான கவுரவத்தை கொடுத்துள்ளது.

ஷங்கர், மணிரத்னம் வரிசையில் இணைந்த நெல்சன்: அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் கடந்த 10 நாட்களில் அதிகப்படியான வசூலை குவித்துள்ளது. இந்தப் படத்திற்கு சிறப்பான விமர்சனங்களும் கிடைத்துள்ள நிலையில், படம் தற்போது 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக படம் 375 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது படம் 500 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. படத்தில் கடத்தப்பட்ட தன்னுடைய மகனை மீட்கும் போராட்டத்தில் ரிடையர்ட் ஜெயிலர் ரஜினிகாந்த் ஈடுபடுவதாக கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப் படத்தில் கேமியோ கேரக்டர்களில் சுனில், தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடித்திருந்தனர். அவர்களின் கேரக்டர்கள் மிகவும் சிறப்பாக படத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறிது நேரமே வந்தாலும் சிவராஜ்குமார் படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார்.

அவரது கேரக்டர் மற்றும் ஸ்டைல், ரஜினியை தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதேபோல படத்தின் வில்லனாக நடித்துள்ள விநாயகன் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் அதிகமான நட்சத்திரங்களை பயன்படுத்தியிருந்தாலும் அனைவருக்கும் சமமான கேரக்டர்களை கொடுத்து அவர்களது ரசிகர்களை ஏமாற்றாமல் திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்துள்ளார் நெல்சன். படம் 500 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ள நிலையில் மேலும் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் இயக்குநர் நெல்சனுக்கு சிறப்பான கௌரவத்தை கொடுத்துள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நெல்சன் திலீப்குமார் அநத்ப் படத்தில் சிறப்பான வசூலையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தார். தொடர்ந்து டாக்டர் படமும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால் விஜய்யுடன் கூட்டணி அமைத்த பீஸ்ட் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார். இந்நிலையில் ஷங்கர், மணிரத்னம் வரிசையில் இணைந்துள்ளார் நெல்சன். முன்னதாக ஷங்கரின் 2.O மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருந்த நிலையில், தற்போது ஜெயிலர் படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இதன்மூலம் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள இயக்குநர்கள் பட்டியலில் ஷங்கர், மணிரத்னத்தை தொடர்ந்து தற்போது இணைந்துள்ளார் நெல்சன். முன்னதாக வெளியான பீஸ்ட் படம் அவருக்கு சொதப்பலாக அமைந்த நிலையில், தன்னை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார் நெல்சன்.


Related Post