“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

post-img

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.


இதனை தொடர்ந்து பிரபலங்கள் நடிகைகளிடம் இது குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அந்த வகையில், நடிகை அதுல்யா ரவியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அதுல்யா ரவி.


இதனை தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் நடித்திருக்கிறார்.


தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக டீசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் லிவிங் ரிலேஷன்ஷிப் மற்றும் திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக இருப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த அதுல்யா ரவி, இப்போது காலம் மாறிவிட்டது நிறைய பேர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முடிவு அதில் கருத்து சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.


இருப்பினும் நம்முடைய கலாச்சாரம் என்பது திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியாக உறவு கொள்வது தான் சரி.


ஆனாலும் திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வது திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று தான் கூற முடியும் அதில் மூக்கை நுழைப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது அது சரியாகவும் இருக்காது என கூறியிருக்கிறார்.

 

 

Related Post