தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் அதிகமாக வலம் வந்தவர் ஜனனி அசோக் குமார். சீரியல் நடிகைகள் பலரும் சுற்றுலா சென்று வரும் நிலையில் நடிகை ஜனனி வெளிநாடு சென்று எடுத்த புகைப்படத்தால் ரசிகர்கள் தங்கள் கமெண்டுகளை நிரப்பி வருகிறார்கள்.
இவர் நடித்த பல சீரியல்கள் ஹிட் அடித்துள்ளன. செம்பருத்தி, மாப்பிள்ளை, மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் என பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். சீரியலில் அசத்தி வரும் ஜனனி முதன் முதலில் நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படம் என்பதால் பெரிய கதாபாத்திரம் ஒன்றும் கிடைக்கவில்லை. நயன்தாராவுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஏமாளி என்கிற படத்திலும் நடித்தார். வெள்ளித்திரையில் தொடர்ந்து சிறிய கதாபாத்திரமே கிடைக்க இது செட் ஆகாது என முடிவெடுத்து மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார் ஜனனி.
சமீபகாலமாக ஹோம்லி லுக்கில் இருந்த ஜனனி மாடர்ன் லுக்கிற்கு ரூட்டை மாற்றியுள்ளார். வித விதமாக போட்டோஷூட்கள் செய்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார். இவரை இதுவரை இன்ஸ்டாகிராமில் 1மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
ஜனனி தற்போது விஜயத்வயில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் ஆஹா OTT தலத்தில் வேற மாறி ஆபீஸ் என்ற வெப்த்தொடரில் நடித்து வருகிறார்.
ஜனனி அசோக் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இதயம் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக புது அனுபவத்தை கொடுக்கும் என தெரிவித்து வருகிறார்கள்.
வகேசன் சென்றுள்ள ஜனனி வியட்நாமில் உள்ள மியூசியம் ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் எகிப்து மக்கள் பயன்படுத்திய மம்மி என்று சொல்ல கூடிய ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இதை பார்த்த எப்படி தூங்குவது கனவுல கூட இதுதானே வரும் என கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.