விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஆகும். இது சிறந்த பாடகர்களை தேடும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமாகும். இதில் வரும் தொகுப்பாளர்கள் முதல் ஜட்ஜ் வரை மிகவும் கலகலப்பாக பேச கூடியவர்கள்.
Courtesy: Instagram
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. டாப் 20 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாதக்கணக்கில் பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தற்போது இறுதிச் சுற்றுக்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளார்கள்.
Courtesy: Instagram
சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியை மகாபா மற்றும் ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதில் நடுவராக பின்னணி பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி டயல் மாறும் ஸ்வேதா மோகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Courtesy: Instagram
இதில் ஸ்வேதா மோகன்,பிரபல பின்னணி பாடகியானா சுஜாதா மோகனின் மகள் ஆவார். ஸ்வேதா சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
Courtesy: Instagram
ஸ்வேதா மோகனின் தந்தை கிருஷ்ண மோகன் ஆகும். ஸ்வேதா தனது 9 வயதில் கர்நாடக இசையில் தனது பயிற்சியைத் தொடங்கினார். ஒரு குழந்தை கலைஞராக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இயக்கத்தில் 'குச்சி குச்சி ராக்கம்மா' (பம்பாய்) மற்றும் 'அச்சம் அச்சம் இல்லை' (இந்திரா) ஆகிய பாடல்களின் கோரஸுக்கு பதிவு செய்தார்.
Courtesy: Instagram
ஸ்வேதா இதுவரை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், எம்.எம்.கீரவாணி, எம்.ஜெயச்சந்திரன், ஜான்சன், ஷரத், ஓசேபச்சான், தீபக் தேவ், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, வி. ஹரிகிருஷ்ணா, ஜி.வி.பிரகாஷ், மணி சர்மா, கண்ணன் போன்ற இந்திய இசை அமைப்பாளர்களுக்காக பாடியுள்ளார்
Courtesy: Instagram
அவர் தனது நீண்டகால நண்பரான அஷ்வின் ஷாஷியை திருமணம் செய்து கொண்டார். ஸ்வேதா மோகன் மற்றும் அஷ்வின் ஷாஷிக்கு 2017 இல் பிறந்த ஸ்ரேஷ்டா அஷ்வின் என்ற மகள் உள்ளார். இவர்களது அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.