இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெய ராம், பிரபு, பிராகேஷ் ராஜ் உள்ளிட்ட பல பரிபாலங்கள் நடிப்பில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' . இப்படம் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோதே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என இயக்குநர் மணிரத்னம் கூறியிருந்தார்.இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல இடங்களில் எடுக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் 1 நல்ல வரவேற்பை பெற, இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையருங்களில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தார்.
இதனால் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷ், விகாரம், கார்த்தி, ஜெயா ராம், ஜெயம் ரவி தனி விமானம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். மேலும் இந்த ப்ரோமோஷனில் த்ரிஷா, கார்த்தி, விக்ரம் ஆகியோரின் அசத்தலான உடை அமைப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வந்தது.
இப்படத்தில் நடிகர் கார்த்தியின் 'வந்தியத்தேவன்' கதாபாத்திரம் திரைப்படம் முழுக்க பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரத்யேகமான உடை அணித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது.
படத்திற்காக தங்களின் சமூகவலைத்தளங்களிலும் ப்ரோமோஷன் செய்து வரும் படக்குழுவினரின் மத்தியில் நடிகர் கரத்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர் கார்த்தி, குதிரை வடிவம் பொருத்தப்பட்ட உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கார்த்தியுடன் இணைந்து படம் முழுக்க பயணிக்கும் 'செம்பன்' குதிரையின் வடிவத்தை தனது உடையில் வடிவமைத்துள்ளார். தற்போது இவரின் இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.