தற்போது கேப்ரியல்லாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.
சிறுவயதில் இருந்து நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர் கேப்ரியல்லா, இதனால் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்த சோசியல்; மீடியாக்களில் பிரபலமாக வலம் வந்த டிக் டாக் செயலியை சரியாக பயன்படுத்திக்கொண்டார். நாள் ஒன்றுக்கு எக்கச்சக்கமான ரீல்ஸ் வீடியோக்களை டிக் டாக்கில் பதிவிட்டு அதன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து டிக் டாக் பிரபலமாக கேப்ரியல்லா வலம் வர தொடங்கினார்.
அதன்பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக அறிமுகமானார். டைட்டிலை தட்டித்துக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட கேப்ரியல்லா, இந்த நிகழ்ச்சியில் இறுதிசுற்றுக்கு முன்பே வெளியேற்றப்பட்டார்.
இப்படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த கேப்ரியல்லா, திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார். ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் வாழ்க்கைக்குள் நுழைந்த கேப்ரியல்லா, நடிப்புக்கு சில காலங்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக களம் இறங்கினார். கேப்ரியல்லாவின் கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது சுந்தரி சீரியலில் கலக்கி வரும் கேப்ரியல்லா இன்ஸ்டாகிராமில் செம ஆக்ட்டிவாக அடிக்கடி மாடர்ன் உடையிலும், சேலையிலும் போட்டோஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கேப்ரியல்லா மீனவ பெண் போல போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது கேப்ரியல்லாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.