திரைத்துறையில் உலகளவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருது விழாவிற்கு வரும் போது பெண் பிரபலங்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆடைகளை அணிந்து வருவார்கள். அப்படி தான் இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு வந்த பலர் கண்கவர் ஆடைகளை அணிந்து வந்து அசத்தினார்கள்.
பொதுவாக ஆஸ்கர் விருது விழாவைத் தொடர்ந்து பார்ட்டி ஒன்று நடைபெறும். இந்த பார்ட்டிக்கு வரும் போது நிறைய பிரபலங்கள் போட்டிப் போட்டு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருவார்கள். இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் பார்ட்டிக்கு பல பிரபலங்கள் தங்கள் உடல் முழுவதும் தெரியும்படியான ஷீர் ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். கீழே அப்படி உடல் அப்பட்டமாக தெரியுமாறான ஆடைகளை அணிந்து வந்த பிரலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சியாரா
அமெரிக்க பாடகி, பாடலாசிரியர், நடனக் கலைஞர், நடிகையுமான சியாரா அப்பட்டமாக உடல் தெரியுமாறான மின்னும் ஷீர் உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் முழங்கை அளவு நீளமான கருப்பு நிற கையுறையை அணிந்திருந்தார்.
அட்வோவா அபோவா
பிரிட்டிஷ் ஃபேஷன் மாடலான அட்வோவா அபோவா மார்பின் மேல் இரண்டு அந்தூரியம் பூக்களுடன் தரை நீள வெள்ளை நிற ஸ்கர்ட் கொண்ட ஒரு வித்தியாசமான ஆடையை அணிந்து ஆஸ்கர் பார்ட்டியில் கலந்து கொண்டார்.
எமிலி ரதாஜ்கோவ்ஸ்கி
அமெரிக்க மாடலான எமிலி ரதாஜ்கோவ்ஸ்கி வேனிட்டி ஃபேர் ஆஸ்கார் பார்ட்டிக்கு லண்டன் டிசைனர் ஃபென்பென் வடிவமைத்த ஷீர் சில்வர் ஸ்லீவ் கொண்ட கவுனை அணிந்து வந்திருந்தார்.
அலெஸாண்ட்ரா அம்ப்ரோசியோ
ஹாலிவுட் நடிகையும், விக்டோரியா சீக்ரெட் மாடல் அழகியாக இருந்தவருமான அலெஸாண்ட்ரா அம்ப்ரோசியோ ஷீர் செயின் மெயில் உடையை அணிந்து வந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
காரா டெலிவிங்னே
காரா டெலிவிங்னே ஆஸ்கர் பார்ட்டிக்கு டெல் கோரின் மிகவும் செக்ஸியான ஆஃப் ஷோல்டர் கவுனை அணிந்து, மிகவும் செக்ஸியாக வந்திருந்தார். இந்த கவுனானது கோர்செட் ஸ்டைல் கொண்டிருந்தது.
ஹண்டர் ஷாஃபர்
அமெரிக்க நடிகையும், மாடலுமான ஹண்டர் ஷாஃபர் ஆஸ்கர் பார்ட்டியின் போது மிகவும் கவர்ச்சியான வெள்ளை நிற உடையில் வந்து மிரள வைத்துவிட்டார்.
டெய்சி எட்கர்
ஜோன்ஸ் பிரிட்டிஷ் நடிகையான டெய்சி எட்கர்-ஜோன்ஸ் சீக்வின் நியூட்-இல்யூசன் குஸ்ஸி கவுனை அணிந்து வந்திருந்தார்.