கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதில் எந்தெந்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். பல சீரியல்கள் கடந்த வாரம் பெற்ற இடத்தை காட்டிலும் இந்த வாரம் பெற்ற இடத்தில் அதிரடி மாற்றம் நடந்திருக்கிறது.
1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் 11.52 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரமும் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் 10.65 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
3, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்திலும் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் 10.19 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
4, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.34 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
4, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை அதிகமான டிஆர்பி பெற்றிருக்கிறது. அதுவும் 9.34 பெற்று இனியா சீரியலை போலவே இதுவும் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
5, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த முறை 9.27 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரம் 8.95 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு முன்னேற்றமடைந்து 7.18 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.
8, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் 6. 99 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
9, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் டிஆர்பியில் சரிவடைந்து 6.79 புள்ளிகளை பெற்று 9 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
10, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் 5.71 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.