போர் தொழில் இயக்குநருக்கு குவிந்த அழைப்புகள்.. அடுத்து என்ன படம் தெரியுமா?

post-img

சில முன்னணி நடிகர்கள் நமக்கும் ஒரு கதை இருக்கா? என்றே ஓபனாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடிப்பில் கடந்த வாரம் வெளியான போர் தொழில் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு மழையால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

Por Thozhil Director Vignesh Raja announces his next movie theme

ராட்சசன் படத்தையே வீழ்த்தி விட்டதா போர் தொழில் என நடிகர் விஷ்ணு விஷாலும் அந்த படத்தை நேற்று பாராட்டி இருந்தார்.

ராட்சசனையே முந்திடுச்சா: போர் தொழில் திரைப்படம் இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களில் சிறந்த படமென அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குநர் விக்ரம் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள இந்த படம் தனது ராட்சசன் படத்தையே முந்திவிட்டதா என நடிகர் விஷ்ணு விஷாலே அசோக் செல்வனை பார்த்து ட்விட்டரில் கேட்க, அதை நீ தான் மச்சான் படத்தை பார்த்துட்டு சொல்லணும் என அசோக் செல்வன் பதில் கமெண்ட் போட, விஷ்ணு விஷால் போர் தொழில் படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

Por Thozhil Director Vignesh Raja announces his next movie theme

வசூல் மழை: நல்ல படங்கள் வெளியானாலும் சிறிய நடிகர்கள் படங்கள் என்றால் பெரிதாக தியேட்டரில் ஓடுவதில்லை என்கிற குற்றச்சாட்டையும் போர் தொழில் படம் அடித்து நொறுக்கி வசூல் மழை பொழிந்து வருகிறது.

ஒரு படத்தை விமர்சனம் எந்தளவுக்கு கெடுக்கிறது என்பதற்கும் எந்த அளவுக்கு தூக்கி விடுகிறது என்பதற்கும் சிறந்த உதாரணமாக போர் தொழில் படம் மாறி உள்ளது.

Por Thozhil Director Vignesh Raja announces his next movie theme

விக்னேஷ் ராஜாவுக்கு ஏகப்பட்ட போன் கால்: கிரைம் த்ரில்லர் படமான போர் தொழில் படத்தை இயக்கி தனது ஒட்டுமொத்த திறமையையும் வெளிக்காட்டி உள்ள இயக்குநர் விக்னேஷ் ராஜாவை பல பிரபலங்கள் போன் செய்து பாராட்டி உள்ளனர் என அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 போர் தொழில் படம் ஹிட் அடிக்கும் என நினைத்து தான் படத்தில் நடித்த அத்தனை பேரையும் படாத பாடு படுத்தி எடுத்தேன் என படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விக்னேஷ் ராஜா பேசி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் மன்னிப்பும் கேட்டார்.

அடுத்த படம்: இந்நிலையில், விக்னேஷ் ராஜா தனது அடுத்த படமும் த்ரில்லர் படம் தான் என்பதை ரிவீல் செய்துள்ளார். விக்னேஷ் ராஜாவின் அடுத்த த்ரில்லர் படத்தில் நடிக்க சில டாப் ஹீரோக்களே போட்டிப் போட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சீக்கிரமே தனது அடுத்த பட ஹீரோ மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பை விக்னேஷ் ராஜா வெளியிடுவார் என தெரிகிறது.

Related Post