இதில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறியதாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்கப் போவதாக மிரட்டி வருகிறார்.
இதில் பட குழுவினர் மத்தளம் பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மனப்பாடம் ஒன்றை அமைத்து அவற்றை சேதப்படுத்தி வனவிலங்குகளை இடையூறு கொடுத்து வருவதாக உதயசூரியன் புகார் ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து வனத்துறையிடமும் பொதுப்பணித்துறை இடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தவறியதால் நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்யப் போவதாக கூறி வருகிறார்.
இதில் படக்குழுவினர் செங்குளம் கால்வாயின் உயரத்தை எட்டடியில் இருந்து இரண்டு அடியாக குறைத்து கரையில் இருந்து எடுத்த மண்ணை ஒரு பார்சலில் போட்டு வைத்தனர். இதில் சட்ட விரோதமாக பாலம் ஒன்றையும் கட்டியுள்ளனர்.
மேலும் பட குழுவினர் அதிக ஒளியிலான நிறைய பீம் லைட் கலையும் சட்டவிரோதமாக காட்டில் தீயை எரிப்பது போன்ற அநாகரீகமான வேலையை செய்து வருகின்றனர்.
மேலும் படக்குழுவினர் அதில் நிறைய சண்டை காட்சிகளையும் எடுத்து அங்கு வாழும் உயிரினங்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர் என்று உதயசூரியன் பகிரங்கமாக குற்றச்சாட்டை ஒன்றை அளித்துள்ளார்.
பலமுறை இதற்கு எதிராக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்துள்ளார் உதயசூரியன். இதனை அடுத்து இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தகுந்த தீர்வு காணும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தற்போது இந்த படப்பிடிப்பு இவரது கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை இப்படி சேதப்படுத்தும் இவர்களைப் போன்றவர்களை எல்லாம் தட்டிக் கேட்க ஆளில்லை என்று நினைத்து விட்டார்கள்.
ஆனால் உதயசூரியன் தனித்து நின்று போராடி மக்களையும் விலங்குகளையும் காப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இவருடைய நற்செயல்களை பாராட்டி அனைவரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.