இவர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து சில காரணங்களுக்காக விலக இருக்கிறார். இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
பாக்கியலட்சுமி சதீஷ்
``எல்லாருக்கும் வணக்கம். நான் சொல்லப் போறது நிறைய பேருக்கு கோபம், எரிச்சல், வருத்தம் வரலாம். கஷ்டமா இருக்கு ஆனா இதை செஞ்சே ஆகணும். இன்னும் 10, 15 எபிசோட்ல பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுறேன். அதுல எந்த மாற்றமும் இல்ல. சதீஷ் ஆகிய நான் கோபியா நடிச்சிட்டு இருக்கிற இந்தக் கேரக்டரிலிருந்து விலகுறேன். காரணங்கள் பல இருக்கு.. ஆனா, கொஞ்சம் பர்சனல் காரணங்கள். கோபி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி. நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம எல்லாரும் பாராட்டுற மாதிரி என்னால் முடிஞ்ச அளவுக்கு சுமாரா நடிச்சிருக்கேன். என் மேல அன்பு காட்டுற அனைவருக்கும் நன்றி!' என கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
கோபி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து அவருடைய நடிப்பு பேசப்பட்ட நிலையில் அவர் அந்தத் தொடரிலிருந்து விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சதீஷ் இடத்தில் வேறு யாரும் அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்கிற கருத்தும் பகிரப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி சதீஷ்
சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருது விழாவில் சிறந்த தொடருக்கான விருது பாக்கியலட்சுமி தொடருக்கும், சிறந்த நடிகைக்கான விருது பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவாக நடித்துக் கொண்டிருக்கும் சுசித்ராவிற்கும் வழங்கப்பட்டிருக்கிறது.