அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ்.. இப்போ பாக்கியலட்சுமி.. தொடரும் அதே கதை..

post-img

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வந்த ஒரு காட்சி இப்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் வருகிறது.

இது தவறான வழிகாட்டுதலாக மாறிவிடக்கூடாது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

அப்படி என்னதான் இரண்டு சீரியலிலும் ஒரே கதை பயணித்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பிற சேனலுக்கு போட்டியாக நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைகளத்தோடு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதனாலயே டிஆர்பியிலும் முதல் 10 இடங்களுக்குள் சில சீரியல்கள் இடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் முன்னணி சீரியல் ஆக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. அந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்த நிகழ்வு பலரையும் பேச வைத்திருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியை தெரியாதவர்களை இருக்க முடியாது. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அவர் சீரியலின் கதை படி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய அம்மா வீட்டிற்கு இதுவரைக்கும் ஜெனி போனதே இல்லை. இந்த நிலையில் ஜெனியின் வளைகாப்பு நடத்துவதற்காக செழியன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜெனிக்கு வளைகாப்பு வைத்தால் அவர் அவருடைய அம்மா வீட்டிற்கு போய்விடுவார் என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் செழியன் ஜெனி இடம் அது குறித்து நீ உங்க அம்மா வீட்டுக்கு போக கூடாது என்று நேற்று பேசி இருந்தார்.

அதுபோல இன்று பாக்கியாவிடவும் செழியன் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜெனிக்கு வளைகாப்பு வைத்த பிறகும் அவர் அவருடைய அம்மா வீட்டுக்கு போக கூடாது.ஜெனி நம்ம வீட்டிலேயே இருக்கணும். என்னால் அவளைப் பிரிந்து இருக்க முடியாது என்று டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் இப்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

என்னதான் காதலாக இருந்தாலும் ஜெனி மீது அவருடைய அம்மா அப்பாவுக்கும் அதே பாசம் இருக்க தானே செய்யும். ஆனால் அவர்கள் வீட்டுக்கு போகக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என்று பல கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், இதே கதை தானே சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடந்தது என்று நம்முடைய நினைவுக்கு வருகிறது.

ஆமாம், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம்(தியாகி) தன்னுடைய வளைகாப்பு முடிந்த பிறகு அம்மா வீட்டுக்கு போகாமல் கணவர் வீட்டிலேயே இருப்பார். அதுபோல முல்லையும் தன்னுடைய வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டுக்கு போகாமல் தன்னுடைய வீட்டிலேயே இருப்பார். இப்படியாக எல்லா தியாகங்களையும் செய்பவர்கள் தான் கதாநாயகிகள் என்று சமூகத்தில் ஒரு பிம்பத்தை இவர்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்களா? என்று எண்ணத் தோன்றுகிறது.

நிஜத்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவருடைய அம்மா வீட்டிற்கு போவதற்கு அதிகமாக ஆசைப்படுவர். எத்தனையோ பேர் அருகில் இருந்தாலும் அம்மாவின் அரவணைப்பு அதிகமாக தேவைப்படும். ஆனால் இவர்கள் காட்சிக்காகவும் டிஆர்பிக்காகவும் இந்த மாதிரி புது வழிமுறைகளை கொண்டு வந்து "இதையே சமூகத்தில் பலரும் சுட்டிக்காட்டி, பெண்களுக்கான ஆசைகளை நிராகரித்து விடக்கூடாது" என்று பயம் வருகிறது.

அதே நேரத்தில் இது குறித்து அதிகமான ரசிகர்களும் இது தவறான வழிகாட்டுதல். ஒரு சீரியலில் நடப்பதை அப்படியே இன்னொரு சீரியலில் கொண்டு வர வேண்டுமா? அதுவும் ரியாலிட்டியாக கொஞ்சம் யோசித்து அந்த பெண்ணின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து சீரியல் கதை நகர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்துக்கள் குவிகிறது.

Related Post