தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!

post-img
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கீர்த்தியின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கீர்த்தி சுரேஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற தவறிவிட்டது. தனது முதல் படம் படுதோல்வியானதால் மனம் கலங்காத கீர்த்தி நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார்.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான படம் ரஜினி முருகன். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆஹா ஓஹோவென ஓடியது. முதல் படத்தில் துவண்டுபோன கீர்த்திக்கு இப்படம் செம கம் போக்காக அமைந்தது.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி பிரபலமாக, இவருக்கென ரசிகர்கள் கூட்டம் உருவானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்திக்கு பல படங்கள் வரிசைக்காட்டி நின்றன.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
தொடரி, ரெமோ, பைரவா என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். இப்படியாக தமிழில் கலக்கிய கீர்த்தியின் பார்வை தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியது. நீனு லோக்கல் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார்.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
இப்படியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவை கலக்கிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு தீனிபோடும் விதமாக 'மகாநடி'  திரைப்படம் அமைந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்றது.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
மேலும் இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை புரிந்துகொண்ட கீர்த்தி தொடர்ந்து நல்ல கதை அம்சம் கொண்ட படங்களிலே மட்டுமே நடித்து வருகிறார்.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
இந்தவகையில் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, மாமன்னன், சைரன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி. இப்படி படங்களில்  பிஸியாக இருந்தாலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி அவ்வப்போது தனது புகைப்படத்தை பதிவிட்டும் வருகிறார்.
Courtesy: instagram
PHOTOS: தந்தை மடியில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்!
 
அந்தவகையில் கீர்த்தி, தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது சிறு வயதில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலர் தந்தையர் தினத்தை கொண்டாடாயது போல் கீர்த்தியும் தனது அப்பாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.
Courtesy: instagram

Related Post