சீரியல்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள் பலர். அதேபோல் டிக் டாக், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களின் மத்தியில் ட்ரெண்டாகி திரைப்படங்களில் நடித்தபவர்களும் பலர். ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து திரைப்படங்களில் கலக்கியவர்களை பார்த்ததுண்டா.
Courtesy: instagram
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் தனது பயணத்தை துவங்கியவர் திவ்யா துரைசாமி. அதன் பின் படிப்படியாக விஜே-வாக முன்னேறி தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினாக திவ்யா வலம் வருகிறார். 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார்.
Courtesy: instagram
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யாவுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ஜெய் படத்திலும் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணைநடிகையாக நடித்துள்ளார்.
Courtesy: instagram
எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திவ்யா, ஹீரோயினாக நடிக்க ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
Courtesy: instagram
மேலும் ஜீ 5 ஓடிடி தொடரில் வெளியாகும் மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓடிடியில் வெளியான இந்த இரு வெப் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Courtesy: instagram
இதைத்தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா, சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி கலர்புல் உடையில் போட்டோஷூட் செய்து அதனது இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
Courtesy: instagram
தமிழ் சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்க, கலர்புல் போட்டோஷூட் மத்தியில் ஒரு சில கவர்ச்சி போட்டோஷூட்டையும் செய்து வருகிறார். தமிழில் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் இல்லாததால், ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்த சில சமயங்களில் கவர்ச்சி மூலம் அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
Courtesy: instagram
இந்நிலையில் சமீபத்தில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையில் மளிகை பூவுடன் சுடிதாரில் கலக்கல் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த இளசுகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.