சின்னத்துறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது யூ-ட்யூப் சேனல்களில் வீடியோ பதிவு செய்து வரக்கூடிய பனிமலர் பன்னீர்செல்வம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
தன்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்வுகள், மருத்துவம் சார்ந்த குறிப்புகள், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் என பல்வேறு விஷயங்களில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்.
மட்டுமில்லாமல் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகளையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் உள்ளாடையை எப்படி தேர்வு செய்ய வேண்டும்..? எந்தெந்த நேரத்தில் உள்ளாடையின் அளவை உடனடியாக மாற்ற வேண்டும்..? உள்ளிட்ட விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
அதன்படி பெண்கள் மார்பு எலும்பின் சுற்றளவு மாற வில்லை என்பதற்காக அவர்களுடைய ப்ரா-வின் அளவு மாறாது என்று அர்த்தம் அல்ல. மார்பு எலும்பின் சுற்றளவு மாறவில்லை என்றாலும் மார்பின் அளவு மாறிக்கொண்டே இருக்கும்.
உதாரணதிற்கு தன்னுடைய இரண்டு உள்ளாடைகளை ஒப்பிட்டு ஒரு உள்ளாடை புதியது.. மற்றொன்று பழையது. இந்த இரண்டிலும் இருக்கக்கூடிய மார்பு எலும்பின் சுற்றளவு ஒன்றே தான்.
ஆனால், மார்பை தாங்கி நிற்கக் கூடிய கப் என்று சொல்லப்படக்கூடிய பகுதியின் அளவு மட்டும் மாறி இருக்கிறது என்பதை பாருங்கள். புதிய பிராவில் மார்பை தாங்கும் கப்பின் அளவு மாறி இருக்கிறது.
காரணம், என்னுடைய மார்பின் அளவு முன்பை விட தற்போது சற்று பெரிதாக இருக்கிறது. எனவே நான் என்னுடைய ப்ரா கப்பின் அளவை கூட்டி வாங்கி இருக்கிறேன். அதுபோல உங்களுடைய மார்பின் அளவு திடீரென பெரிதாக்கிவிட்டால் அதற்கேற்ற கப்பின் அளவை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
அப்படி பயன்படுத்தாத பொழுது முதுகு வலி ஏற்படும், தோள்பட்டைகளில் வலி ஏற்படும், அக்குளில் தேவையில்லாத சதை வளர்ச்சி ஏற்படும், அசௌகரியமான உணர்வு ஏற்படும். இது போன்ற விஷயங்கள் ஏற்படாமல் இருக்க உங்களுடைய இடுப்பின் அளவு சரியாக இருந்தாலும் கப்பின் அளவு சரியாக இருக்கிறதா..? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
A post shared by Panimalar Panneerselvam (@panimalar_panneerselvam)
இப்போதெல்லாம் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய கடைகளில் உள்ள பணியாற்றக்கூடிய பெண்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் தெளிவாக கேட்டு சரியான உள்ளாடை அணிவது உங்களுடைய உடல் நலனுக்கு நன்மை பயக்கும் என பதிவு செய்திருக்கிறார் பனிமலர் பன்னீர் செல்வம்.