Pinterest
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க நடிகர்கள் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி செரஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்க கூடிய இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா…? படம் எப்படி இருக்கிறது..? என்பதை பார்க்கலாம்.
காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியாக டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
மனைவி, மகன், மருமகள், பேரன் என முழுமையான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். தந்தையைப் போலவே மகனும் காவல்துறையில் நேர்மையான அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்க நடிகர் ரஜினியின் மகன் வசந்த் ரவி கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் வழக்கை கையில் எடுத்து விசாரணை செய்து கொண்டிருக்க அது மிகப்பெரிய நெட்வொர்க் என தெரிந்தும் சில பெரிய ஆட்கள் மீது வசந்த் ரவி கை வைக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.
இந்த செய்தி வில்லன் விநாயகன் கவனத்திற்கு செல்கிறது. இதனை தொடர்ந்து வசந்த் ரவியை கடத்தி கொலை செய்து விடுகிறார்கள். இதனால் ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலை குலைந்து போகிறது.
அதனை தொடர்ந்து டைகர் முத்துவேல் பாண்டியன் தனது மகனை கொலை செய்தது யார்..? என கண்டுபிடித்தாரா..? இதன் பின்னால் டைகர் முத்துவேலின் குடும்பம் சந்தித்த விளைவுகள் என்ன..? என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சூப்பர் ஸ்டார் மாஸ் காட்டி இருக்கிறார். குறிப்பாக தனது மகனுக்காக பழிவாங்கும் அவதாரம் எடுக்கும் ரஜினியின் ஆட்டம் வேற லெவலில் இருக்கிறது.
ரசிகர்கள் எப்படி ரஜினிகாந்த் திரையில் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டார்களோ.. அதை நிறைவேறி இருக்கிறார் நெல்சன் என்று தான் கூற வேண்டும்.
இந்த படத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக இருப்பது படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் என்று தான் கூற வேண்டும்.
இவருடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ஒரு மிரட்டலான தோற்றத்தை கொடுத்திருக்கிறது. கூடுதலாக மோகன்லால் சிவராஜ்குமார் தோன்றிய காட்சிகள் திரையரங்கை அதிர வைத்திருக்கிறது. கேமியோ கதாபாத்திரங்கள் என்றாலும் கூட திரைக்கதையில் அவர்களுக்கு நிஜமாகவே தேவை இருந்தது என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள் வடிவமைக்க செய்யப்பட்டு இருக்கின்றன இரண்டாம் பாதியில் வேகத்தை விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தொடங்கியதும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை என்ற பேச்சு தான் ரசிகர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.
மட்டுமல்லாமல் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையானவற்றை மட்டும் செய்திருக்கின்றனர். கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் என்னவோ அதனை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தமன்னா பாடலில் அசத்தியுள்ளனர் சில காட்சிகள் மட்டுமே தோன்றுகிறார். நடிப்பில் அவருக்கு பெரிய பங்கு எதுவும் இல்லை.
விநாயகன் கேங் மற்றும் ரஜினிகாந்தின் கேங்கில் நடிதுள்ளவர்களுகு தனியாக பாராட்டுகளை கூறியாக வேண்டும். மற்றபடி நடிகர்கள் சரவணன் அனைவருடைய நடிப்பும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படத்திற்கும் தேவையானதாகவும், வலு சேர்க்கும் வகையிலும் இருக்கின்றது.
ரஜினிகாந்தின் நடிப்பு, விநாயகம் நடிப்பு, நெல்சனின் திரைக்கதை, மோகன்லால் சிவராஜ்குமார், சுனில், அனிருத் பாடல்கள், பின்னணி இசை என அனைத்துமே படத்திற்கு பிளஸ் பாய்ண்டாக இருக்கின்றது. குறை என்று சுட்டிக்காட்டும் அளவுக்கு பெரிய அளவில் எதுவும் இல்லாததால் நடிகர் ரஜினியின் அக்மார்க் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தை எதற்காக இவ்வளவு கேவலமாக எடுத்தீர்கள் என்று மீண்டும் நெல்சன் சீண்டி கொண்டிருக்கின்றனர் இணைய வாசிகள்.
Jailer – Tamizhakam Rating