ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலக்கி வரும் கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி ஜூனியர்' என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நடிகை கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்த இவர், 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். பிக் பாஸ் போட்டியிலுருந்து பாதியிலே எலிமினேட் செய்யப்பட்ட கேப்ரியல்லாவிக்கு ரசிகர்கள் மிகுந்த ஆதரவு கொடுத்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு பிஸியாக இருந்தார் கேப்ரியல்லா. வாய்ப்புகள் கிடைக்காதா என எதிர்பார்த்த கேப்ரியல்லாவிக்கு பம்பர் ப்ரிஸ் அடித்தது.
திரைப்பட வாய்ப்புகளுக்காகவே பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா "என் வழி தனி வழி" என சொல்வது போல் சீரியல் ஹீரோயினாக கலக்கி வருகிறார்
சீரியல் ஷூட்டிங்கில் எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கேப்ரியல்லா அடிக்கடி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கேப்ரியல்லா எகிப்து ராணி போல் உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இவரின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.