என்னோட ஹேண்ட் பேக்ல இது எப்பவும் இருக்கும்.. ரகசியம் உடைத்த ஜோதிகா..!

post-img


தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. சூர்யாவுடன் நடித்த பூவெல்லம் கேட்டுப்பார் தான் இவரது முதல் படம்.
ஆனால் அஜீத்துடன் நடித்த வாலி படம்தான், முதலில் ரிலீஸ் ஆகி விட்டது. அதனால் சினிமாவில் எனது பர்ஸ்ட் ஹீரோ அஜீத், வாழ்க்கையில் என் ஹீரோ சூர்யா என ஜோதிகா விளையாட்டாக சொல்வதுண்டு.

 


ஜோதிகா தன்னை மிகச்சிறந்த நடிகையாக பல படங்களில் நிரூபித்திருக்கிறார். குறிப்பாக சந்திரமுகி படத்தில், கங்கா கேரக்டரில் ஜோதிகா வாழ்ந்திருப்பார்.


ஜோதிகா…
இப்போது தனது கணவர் சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார். சூர்யாவுக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்கவும் வாய்ப்பு வாங்கி வந்துவிட்டார்.

 

அதனால் இனி பாலிவுட் ஸ்டராக, சூர்யாவை ‘பம் பம்’ என சிங்கம் பிஜிஎம்மில் ரசிக்கவும் இந்தி பட ரசிகர்களுக்கு வாய்ப்புள்ளது.
ஹேண்ட் பேக் சீக்ரெட்..
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது ஹேண்ட் பேக் சீக்ரெட் குறித்து, நடிகை ஜோதிகா பேசியிருந்தார்.
அப்போது, பொதுவாக நான் மேக்கப்பில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்ட மாட்டேன். மேக்கப்பில் அதிக கவனம் எனக்கு கிடையாது. அதனால் என் ஹேண்ட் பேக்கில் மேக்கப் பொருட்கள் நிச்சயம் இருக்காது.


ஏடிஎம் கார்டு இருக்கும். அப்புறம் காசு கொஞ்சம் இருக்கும். என் பசங்களுக்கு 2 வாட்டர் பாட்டில் வைத்துக்கொள்வேன், அதுவே ஹேண்ட் பேக்கை புல் பண்ணி விடும்.
அப்புறம் பசங்க சாப்பிட கொஞ்சம் சிநேக்ஸ் வைத்திருப்பேன். ஏதாவது டிராயிங் புக்ஸ் இருக்கும்.
ஓவியம் வரைவதில் என் பசங்களுக்கு ஆர்வம் அதிகம். அதனால் ஏ போர் சீட்டுகள் கொஞ்சம் இருக்கும். அப்புறம் பென்சில், ரப்பர், கலர் பென்சில் இதெல்லாம் ரப்பர் பேண்டுல சுத்தி வைச்சிருப்பேன்.
என் பேக்ல எல்லாமே, என் பசங்களுக்கு தேவையான பொருட்கள்தான் வைத்திருப்பேன்.
என்னோட ஹேண்ட் பேக்ல எப்பவும் பசங்களோட திங்க்ஸ் தான் இருக்கும் என ரகசியத்தை உடைத்திருக்கிறார் ஜோதிகா.

 

 

Related Post