நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் முதல் 15 நிமிட காட்சிகள் லீக் ஆகிவிட்டது என இணையத்தில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றது.
மேலும், பைரட் இணையதளங்களிலும் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
லியோ திரைப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகாத நிலையில் படத்தின் 15 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று தான் லியோ படத்தின் கதை இணையத்தில் வெளியாகிவிட்டது என்று சர்ச்சை கிளம்பியது. படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது. படத்திற்கு A சான்று கொடுக்கப்பட்டு அதன் பிறகு சில மாற்றங்கள் செய்த பிறகு U/A சான்று கொடுத்தது. இப்படி லியோ படத்தை சுற்றி பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு இந்தியா முழுதும் வெளியாகவுள்ள லியோ திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா..? செய்யாதா..? என்று காலை 10 மணிக்கு தெரிந்து விடும். ஆனால் அதற்குள் இணையத்தில் காட்சிகள் லீக் ஆவது.. படத்தின் கதை லீக் ஆவது.. என படத்திற்கு மேலும் மேலும் எதிர்பார்ப்பு எதிரி கொண்டே போகிறது.